Sunday, September 27, 2015

eyarkai maruthauvam

bloggersmeet2015@gmail.comஇந்தக் கட்டுரை எனது சொந்தப் படைப்பாகும். வேறு யாருக்கும் அனுப்பவில்லை. வேறு எந்த ஒரு இதழிலோ மின்னிதழிலோ பிரசுரமாகவில்லை. 2015 வலைப்பதிவர; திருவிழாவிற்காக அனுப்பப் பட்ட படைப்பாகும். முடிவு வெளியாகும்வரை வேறெதிலும் வெளிவரமாட்டாது என்பதற்கும் உறுதியளிக்கிறேன். நன்றியுடன் ம.மு.கண்ணன்.

இயற்கையோடு வாழ நினைத்தால் வாழலாம்.

(கண்ணன்கணினி.)


    மருத்துவம் என்னும் ஆறெழுத்து மந்திரம் இன்று பலரையும் உயர;த்தியிருக்கிறது. யாரை என்றால் மருத்துவர;களை. நோயில் விழுந்தவர;களைக் காப்பாற்றியதால் அவர;களது தட்சணையில் மருத்துவம் செய்தவர;கள் உயர;ந்திருக்கிறார;கள். ஆனால் ஒரு முறை நோயில் சிக்கியபிறகும் விழிப்பாக இல்லாதவர;கள் மீண்டும் மீண்டும் நோயில் விழுந்துகொண்டேயிருக்கிறார;கள். அவ்வாறு விழுந்து விட்டவர;களையும் நோய் வராமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர;களுக்காகவும்தான் இந்த சிறு கட்டுரை.
    நமக்கு ஆயுள்பலம் என்ன என்று இதுவரை அறிந்திருக்கவில்லை. அதனால் எப்போது இறப்பு வந்தாலும் இறந்து விடுவோம் என்ற தவறான ஒரு நம்பிக்கையை நமக்குள் விதைத்து வளர;த்து வைத்துக் கொண்டிருக்கிறோம். நம் உடம்பும் உயிரும் நம் கையில் இருக்கிறது என்பதை அறியத் தவறி விடுகிறோம். ஒருவரைப் பார;த்து உங்களால் எவ்வளவு காலம் உயிர; வாழமுடியும் என்று கேட்டால் அது என்ன என் கையிலா இருக்கிறது என்பார;கள். கேட்பவரும் ஒத்துக் கொள்ளும் விதமாக அது இருக்கும்.
    நமது வாழ்நாள் பழங்காலத்தில் அதிகமாக இருந்தது என்றும் இல்லையில்லை பழங்காலத்தில் குறைவாக இருந்தது, இப்போது மருத்துவத் துறையின் அபார வளர;ச்சியால் வாழ்நாள் வருடங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன என்றும் பட்டி மன்றம் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக்கேட்டு அதைப்பற்றிக்கூட யோசிக்க நேரமின்றி இயந்திர மனிதர;களாக நம் சூழ்நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.
    நமது வாழ்நாள் வயது 300-ஆண்டுகள் என்றால் சற்று கிறுகிறுப்பு வரத்தான் செய்யும். அவ்வளவு காலம் வாழ முடியுமா? என்ற சந்தேகம் நமக்கு வரும். வாழ முடியும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதைச் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கும். எந்த ஓர; உயிரினத்துக்கும் அதன் பருவ காலத்தைப்போல 20-மடங்கு அதன் வயது ஆகும்.
    ஒரு முயல் பிறந்தவுடன் மூன்று மாதங்களில் பருவத்திற்கு வந்து விடுகிறது. அதன் வயது ஐந்து ஆண்டுகள். அதாவது 3பெருக்கல் 20 எனில் 60மாதங்கள். அதாவது ஐந்து ஆண்டுகள். ஓர; ஆட்டுக்குட்டி பிறந்து விட்டால் ஆறு மாதங்களில் பருவத்திற்கு வருகிறது. அதன் 20-மடங்காக 10ஆண்டுகள் உயிர; வாழ்கின்றன. பசு கன்று போட்டால் அந்தக்கன்றுக்குட்டி ஓர; ஆண்டில் பருவத்திற்கு வருகிறது. அதன் 20-மடங்காக 20-ஆண்டுகள் உயிர; வாழ்கின்றன. அனைத்து இயந்திரங்களுக்கும் சக்தி கணக்கை அளிக்கும் குதிரைக்குட்டி 2-வயதில் பருவத்திற்கு வருகிறது. அதன் 20-மடங்காக 40-ஆண்டுகள் உயிர; வாழ்கின்றன. இது ஒவ்வோரு உயிரினத்துக்கும் பொருந்தும். அது மனித இனத்துக்கும்தான்.
    அப்படிப் பார;க்கும்போது மனித இனத்துக்கு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சற்றேறக்குறைய 15வயதில் பருவத்திற்கு வருகிறார;கள். சிலர; 12, 13ஆகவோ 17-வயதாகவோகூட இருக்கும். சராசரியாகப் பார;த்தால் 15வயது என்பது சரியாக இருக்கும். அதன் 20மடங்கு என்பது 300-ஆண்டுகள் என்பது இயற்கையின் நியதிப்படி சரியான வயதாகும்.
    இது அறிவியல் பார;வையிலும் வரலாற்றுப் பார;வையிலும் இயற்கையைச் சோதித்ததிலும் கிடைத்த உண்மை. வால்கா முதல் கங்கைவரை என்ற நூலில் பல்வேறு காலகட்டங்களிலும் உள்ள  வாழ்நிலையைப் பதிவு செய்திருப்பார; அதன் ஆசிரியர;. மத நம்பிக்கையும் சில நேரங்களில் அதை வலியுறுத்துகின்றன. ஆனால் அதைக் கடைப்பிடிக்கத் தவறியதால்தான் மனிதனின் ஆயுள்காலம் குறைந்து கொண்டே வந்திருக்கிறது.
    இப்பவும் சர;க்கரை நோய் தந்தைக்கு இருந்தால் பிள்ளைகளுக்கு வந்து விடும் என்று நம்புகிறோம். தந்தைக்கு 60வயதில் வந்தது. பிள்ளைக்கு 50வயதில் வந்தது. பேரனுக்கு 40-வயதிலேயே வந்து விட்டது என்பதை ஒப்புக் கொள்கிறோம். அப்படித்தான் வயது குறைந்து விட்டது. இதே தத்துவத்தை நம் முன்னோர;கள் நம்மிடம் சொல்லும்போது எங்கள் முப்பாட்டனார; 120வயது வரை வாழ்ந்தார;. எங்கள் பாட்டனார; 110வயது வரை வாழ்ந்தார;. என் தந்தையார; 100-வயது வரை வாழ்ந்தார;. எனக்கு 85வயது ஆகிறது. என் தந்தையார; வயதுவரை வாழ்ந்து விடலாம் என்று பார;த்தால் இப்போது மூச்சு முட்டுகிறது. இன்னும் ஓர; ஐந்து வயது வாழ்ந்து வரலாற்றை நிறைவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொல்வதைப் பார;க்க முடிகிறது. அப்படி என்றால் நம் நிலை என்னவாக இருக்கும்? என்னவோ இருக்கும்வரை இருப்போம். போகிற போது போக வேண்டியதுதான் என் மனநிலை சாதாரணமாக வந்து விடுகிறது.
    அதை மாற்ற வேண்டும். அது சற்று கடினமானதுதான். போராட்டமே வாழ்க்கை என்ற நிலையைச் சற்று மாற்றி வாழ்வதற்காக நாம் போராட வேண்டியிருக்கும். காரணம் வாழும் வயதை அதிகரிக்கச் செய்யும் சுயபோராட்டமாகும். அது நமக்கு மட்டுமல்ல. நம் சந்ததியின் வயதையும் அதிகரிக்கச் செய்ய வேண்டிய போராட்டம். நம் தந்தையின் வயதைவிட பத்திருபது வயது கூட்டுவதற்கு நாம் போராடிக் கூட்டினால் நம்வயதை விட நம் பிள்ளைகளின் வயதை இன்னும் ஒரு பத்திருபது வயதை அதிகரிக்கச் செய்ய அவர;களைப் போராடத் தயார; படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் நூறு வயது  வாழ்ந்தால் நம் பிள்ளைகள் நூற்றிருபது வயதுவரை வாழ்வதற்குத் தயாராகுவார;கள். அவர;களது பிள்ளைகள் 140-வயது வரை வாழ்வார;கள். இது நடக்குமா? என்றால் நிச்சயம் நடக்கும். இதுபோலவே பத்திருபது தலைமுறைகள் கடந்தால் நம் தலைமுறையின் வாரிசுகள் நிச்சயமாக 300-ஆண்டுகள் உயிர; வாழ முடியும். அதுவரை நம் சந்ததியினரைப் பழக்கப்படுத்திக் கொண்டு வருவதானது சகலத்தையும் உணர;ந்திருந்தால் முடியும்.
    பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த உயிரினங்களுக்கும் இந்த ஆயுள்காலம் சரியாக இருக்கிறது. இப்போது இருக்கும் உயிரினங்களுக்கும் இந்த கணக்கு சரியாக இருக்கிறது. மனிதனுக்கு மட்டும் மாறிவிட்டது. ஏன் என்றால் உணவுமுறை மாறிவிட்டது. அதனால் வாழ்நாளும் குறைந்து வந்து விட்டது. நம் முப்பாட்டன் திருவள்ளுவர; குறைந்தது 300-ஆண்டுகளாவது உயிர; வாழ்ந்திருந்தால் மட்டுமே 1330-குறட்பாக்களுக்குள் உலக விசயங்கள் அனைத்தையும் அடக்கியிருக்க முடியும். அது உலகப்பொதுமறையாகவும் படைத்திருக்க முடியும். திருவள்ளுவர; வயதிலும் சிறு தவறை நாம் செய்திருக்கிறோம். அவரது பிறப்பை வைத்து இதுவரை திருவள்ளுவர; ஆண்டு சொல்லிக் கொண்டிருக்கிறோமே தவிர எப்போது பிறந்தார; எப்போது மறைந்தார; என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை.
    சரி நம் சந்ததியினர; 300- உயிர; வாழ்வது இருக்கட்டும். நாம் 100வயதுவரையாவது வாழ வேண்டாமா? அதற்கு மேல் வாழ இப்போது தயாரானாலேபோதும். அது இருக்கட்டும். உயிர;மீது ஆசை கொண்டவர;கள் அதற்கு மேலும் வாழட்டும். ஆனால் நூறுவயது சாத்தியம் என்பது கண்ணுக்கு முன்னால் உண்மை என்றபோது அதுவரை நோய்நொடியின்றி வாழ வேண்டாமா? வாழ வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதற்கு சில உணவு முறை மாற்றங்களைச் செய்து கொண்டாலேபோதும்.
    நமக்குச் சில தவறான புரிதல்கள் உண்டு. அதில் உதாரணத்திற்கு ஒரு குறளைக் குறிப்பிட விரும்புகிறேன்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்- என்ற குறட்பாவிற்கு ஏற்கனேவே உண்ட உணவு செறித்தபின் உணவு உண்டால் யாக்கை என்று சொல்லக்கூடிய இந்த உடம்புக்கு மருந்து என்று ஒன்று வேண்டாம் என்ற பொருளாகும் என்று இதுவரை பொருளுரை சொல்லி வரப் பட்டுள்ளது. அதற்கு நாம் மறுக்கவும் இல்லை. ஆனால் அதைச் சற்று மாற்றியும் யோசிக்க வேண்டும்.
    அதாவது மருந்து என யாருக்கு வேண்டாம் என்றால் அருந்தியதை அற்றுப் போகச் செய்வதை போற்றி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார;. அதாவது நூறுகிராம் எடைகொண்ட பாலைச் சாப்பிட்டால் 70-கிராம் எடையுள்ள தண்ணீர;தான் வெளியேறும். 100-கிராம் எடையுள்ள பழச்சாறு உட்கொண்டால் 60-கிராம் எடைகொண்ட கழிவுகள்தான் வெளியேறும். மற்றவை உடலில் தங்கிவிடும். அன்னப்பால் என்று சொல்லக்கூடிய நீராகாரம் 100-கிராம் எடை உட்கொண்டால் 90-கிராம்தான் வெளியேறும். ஆனால் 100-கிராம் எடைகொண்ட தண்ணீரை உட்கொண்டால் அது 110-கிராம் எடைகொண்ட கழிவுகள் அது சிறுநீராகவும் வியர;வையாகவும் வெளியேறும். அதாவது உடலில் உள்ள 10-கிராம் எடைகொண்ட நச்சுப் பொருட்களை நச்சு உப்புக்களை வெளியே கொண்டு வந்து விடுகிறது. அவ்வாறு அற்றதை அற்றுப்போகச் செய்யும் தண்ணீரை உணவாக உட்கொண்டு உயிர;வாழப் பழகிக் கொள்ளும் உடம்பிற்கு மருந்து என்று ஒன்று தனியாக வேண்டியதில்லை என்கிறார; நம் திருவள்ளுவர;. அதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்றால் மற்றவர;களைப் பார;த்து முடிவுக்கு வர முடியாது. தான் பழகிப் பார;த்தால் மட்டுமே முடியும். அதற்குக் குறைந்தது ஒருமாதத்திலிருந்து ஆறுமாதம்வரைகூட ஆகலாம். அதை உடனே ஒரு முடிவுக்கு வர முடியாதவர;கள்கூட ஒரு வருடத்தில் பழகியும் பயிற்சி எடுத்தும் கடும் முயற்சி செய்தும் கண்டு கொள்ளலாம்.
    அதற்குச் செலவில்லை. சிரமம் இல்லை. முயற்சி இருந்தால் மட்டும் அறிந்து கொள்ளலாம். அதைத்தான் அருமையாக ஒன்றே முக்கால் அடியில் சொல்லியிருக்கிறார; நம் பாட்டனார; திருவள்ளுவர; அவர;கள். இதை வலியுறுத்திச் சொல்லும் நான் எனக்கு வந்த பலநோய்களுக்கு வெறும் தண்ணீரை மட்டும் பயன்படுத்தி குணப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சில தேவைகளுக்காகவும் ஆய்வுக்காகவும் எனக்கு நானே வலிய நோயை வரவழைத்து அதற்கு இந்த தண்ணீர; எனும் மருந்தைக் கொண்டு குணப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் பெற்ற பலனை மற்றவர;களுக்கும் பயன் படுத்தி ஏராளமான நபர;களைக் குணப்படுத்தியும் இருக்கிறேன். இந்தப் பயிற்சியானது எந்தப் பணியில் இருப்பவர;களுக்கும் உயிர;மீது அக்கறை கொண்டவர;களுக்கும் சாத்தியப்படும். அதைத்தான் வள்ளுவர; சொல்லியிருப்பதாக வேறு சிலரும் சொன்னதன் பொருளைப் புரிந்து கொண்டு பயன்படுத்திப் பார;த்து நான் எடுத்துக் கொண்டேன்.
    தண்ணீரை உணவாகப் பயன்படுத்துவது முதலில் பயிற்சி எடுத்துக் கொள்ளும்போது சிரமமாகத்தான் இருக்கும். அதற்காக முதலில் உணவின் அளவைக் குறைத்து விட்டுச் சிலகாலம். அதன்பிறகு இயற்கை உணவுகளை உட்கொண்டு சில காலம். பிறகு அளவைக் குறைத்து சிலகாலம் என மற்றவற்றைக் குறைத்து விட்டு தண்ணீரை மட்டும் அதகரித்துக் கொண்டே வர இது சாத்தியமாகும் என்பது எளிமையான உண்மை.
    இவ்வாறு வாழ்பவர;கள் நம்மில் பலரும் இந்த 2015-லும் இருக்கிறார;கள் என்று சொல்லும்போது நமக்குமட்டும் சாத்தியப்படாதா என்ன? கோவை பொறியாளர; வெங்கடேசன், கோபிச்செட்டிபாளையம் முன்னாள் ராணுவ வீரர; இனியன், ஆசிரியர; மற்றும் பொறியாளர; இளங்கோ ஆகிய மூவரைத் தவிர இன்னும் நிறையப் பேர; இருக்கிறார;கள். அவர;களுக்கு இது சாத்தியப்படும்போது மனிதனுக்கு மருத்துவம் என்ற நிலையே இருக்காது. இப்பொழுதும் பாருங்கள் தான்தோன்றித்தனமாக இருக்கும் விலங்கினங்களுக்கு மருத்துவம் தேவைப்படுவதில்லை. அதன் இயற்கை நிலையை மாற்றி அடைத்தும் கட்டிப்போட்டும் வளர;க்கும் விலங்கினங்களுக்கு மட்டுமே நோய் வருகின்றன. குறிப்பாக இயற்கையோடு ஒன்றி இருக்கும் விலங்கினங்களுக்கும் தேவைப்படுவதில்லை. ஆனால் மரபணு மாற்றம் செய்த விலங்கினங்களுக்கு மட்டும் அடையாளம் தெரியாத நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் இயற்கையை மாற்றும்போதுதான் நோய்கள் அதிகரித்து வயது குறைகின்றனவே தவிர இயற்கையைக் கடைப்பிடிக்கும்போது எந்த ஒரு பாதிப்பும் வருவதில்லை.
    விருந்து என்றால் அறுசுவை உணவு என்கிறோம். ஆறுசுவை உட்கொள்ளுகிறோமா? இனிப்பு, உப்பு, துவர;ப்பு, கார;ப்பு, புளிப்பு என்று எடுத்துக் கொள்ளும் நாம் அதற்கு இணையாக கசப்பை விட்டு விடுகிறோமே! அப்புறம் மற்ற சுவைகளால் வரக்கூடிய பாதிப்பைச் சரிசெய்யும் கசப்புக்கு என்று தனியாக மருந்து எடுத்துக் கொள்ளும் நிலை வந்து விடுகிறது. ஆனால் அனைத்தையும் சரி செய்யக் கூடியது தண்ணீரில் மட்டும் உள்ளது. அதையும் தாண்டி பஞ்ச பு+தங்களையும் பயன்படுத்தி வாழக் கற்றுக் கொண்டால் சித்தர;களின் வாழ்வியலாகும். அது நமக்கு வேண்டுமா வேண்டாமா என்பது வேறு. அது விருப்பப்பட்டவர;கள் மட்டும் தேர;ந்தெடுக்கும் வழியாகும்.
    ஆனால் நோயின்றி வாழ சாதாரண உணவுப் பழக்க மாற்றம் மட்டுமே போதுமானது. அதையும் கற்றுக் கொண்டு முழுமையான பயிற்சியை எடுத்துக் கொண்டு பின்னர; விட்டு விடலாம். தேவைப்படும்போது மட்டும் கடைப்பிடித்துக் கொண்டாலே நூறு வயதுவரை நோய் நொடியின்றி வாழ முடியும் என்று சொல்லும்போது அனைவரும் முன்வரலாமே.
    சில ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில கிராமங்களில் மர;மக்காய்ச்சல் என்றொரு நோய் வந்தது. டெங்கு என்று பெயர; சூட்டி அழைக்கப் பட்டது. அதில் சிலர; இறந்து போய் விட்டார;கள். அப்போது பொதுமக்கள் விழித்துக் கொண்டார;கள். அதனால் அரசு மருத்துவ மனைகளின் மீது இருந்த நம்பிக்கையை இழந்து தனியார; மருத்துவ மனைகளுக்குக் கொண்டு செல்லத் துவங்கினார;கள். அங்கு கொண்டு சென்றும் பலர; இறந்தார;கள். மக்கள் பீதியடைந்தார;கள். தனியார; மருத்துவ மனைகளுக்குக் கொண்டு சென்றபோதிலும் சில லட்சங்களைச் செலவு செய்து காப்பாற்றினாலும் சாதாரண காய்ச்சலுக்குக்கூட மக்கள் பயந்தார;கள். நிலத்தை விற்று மட்டுமல்ல தாலியை விற்றுக் கணவரைக் காப்பாற்றிய பெண்கள் உண்டு என்றால் அந்தக் காய்ச்சலின் உக்கிரம் எந்தளவிற்கு மக்களைப் பாதித்திருக்கும் என்று நினைவு படுத்தி அறிந்து கொள்ளலாம்.
    மருத்துவ மனைகள் தோறும் மரண ஓலங்கள். சிறுசிறு மருத்துவ மனைகள் எல்லாம் மிகப் பெரிய மருத்துவ மனைகளுக்கு பரிந்துரை செய்து நோயாளிகளை அனுப்பிக் கொண்டிருந்தன. அங்கும் செத்து விழுந்து கொண்டிருந்தால் என்னதான் செய்வார;கள் பாவம். ஒவ்வொரு நோயாளிகளிடமிருந்தும் லட்சங்களைப் பெற்றுக் கொண்ட மருத்துவமனை நிர;வாகங்களால் உயிர;களைக் காப்பாற்ற முடியாமல் திணறின. மருத்துவ மனைகளின் படுக்கைகளில் மட்டுமல்ல தாழ்வாரங்களில்கூட மர;மக்காய்ச்சல் நோயாளிகளும் அவர;கள்தம் உறவினர;களும்தான்.     ஆனால் அரசு மருத்துவ மனைகளில் காற்று வாங்கியது. அரசுமருத்துவர;கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார;கள். கேட்டால் எங்களிடம் உரிய மருத்துவ உபகரணங்கள் இல்லை. மர;மக் காய்ச்சலுக்கு சோதனை செய்யும் கருவிகள் அங்குதான் இருக்கின்றன என்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார;கள்.
    ஒரு கட்டம்வரை பொறுத்துப் பார;த்த பொது மக்கள் எங்களைக் காப்பாற்று அரசே என வீதிகளில் வந்து போராட்டம் நடத்தத் துவங்கினார;கள். அதுவரை சித்த மருத்துவத்தில் குணமாகிவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்த சித்த மருத்துவர;களின் குரல் எடுபடவில்லை. மக்கள் போராட்டத்திற்குப் பிறகு எடுபட்டது. சித்த மருத்துவர;கள் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து எழுந்த குரல் எடுபட்டது. அரசு ஏற்றுக் கொண்டதோ ஏற்றுக் கொள்ளவில்லையோ தெரியாது. அந்த மருந்தைப் பரிந்துரை செய்து தொலைக் காட்சிகளின் மூலம் எடுத்துச் சென்றது. அதை எடுத்துச் சொல்லவும் திரைப்பட நட்சத்திரங்கள் தேவைப் பட்டார;கள். திரைத்துறையினர; சொன்னவுடன் மர;மக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர;கள் தாங்களே அந்த மருந்தைத் தயாரித்து உட்கொண்டார;கள். காய்ச்சல் பறந்து ஓடிவிட்டது.
    அந்த மருந்துதான் நிலவேம்புக் கசாயம், ஆடாதொடைக் கசாயம், பப்பாளி இலைச்சாறு. இந்த மூன்றில் எதைக் கொடுத்தாலும் குணமானது. மூன்றையும் கொடுத்தாலும் குணமாகி விட்டது. பக்க விளைவுகள் ஏதுமில்லாமல் இருந்தது. இன்றளவும் இந்த மூன்று கசாயத்தைக் கண்டு டெங்கு எட்டிப்பார;க்கவில்லை. இந்த நோய்க்காக மருத்துவ மனைகளில் யாருமில்லை. சில நேரங்களில் வந்த காய்ச்சல் நோயாளிகளைச் சோதித்ததில் யாருக்கும் டெங்கு இல்லை என்றால் டெங்கு யாருக்குச் சொந்தம் என்றும் மேற்சொன்ன, கடைப்பிடித்த, டெங்குவை ஓடஓட விரட்டியடித்த நம் வீட்டில் முளைத்துக் கிடந்த தாவரங்கள் யாருக்குச் சொந்தம் என்றும் எண்ணிப் பார;த்து விட்டு இயற்கை மருத்துவத்தைக் கடைப்பிடிப்பதா வேண்டாமா? அது நமக்கு ஒத்து வருமா வராதா என்று ஒரு முடிவுக்கு வரலாம். இது ஓரு நோய்தான். ஒரு மருந்துதான். இதைப்போல் பல நோய்களுக்கும் பல மருந்துகளும் மருத்துவ முறைகளும் உள்ளன. ஒரே மருந்து பல நோய்களைக் குணப்படுத்த வல்லது. ஒரு நோய்க்கு பல மருந்துகளும் பயன் படும். அவையெல்லாம் மருந்துகளா உணவா என்பதை ஆய்வு செய்து பார;க்கும்போதுதான் இதுவரை எவ்வளவு நாம் இழந்திருக்கிறோம் என்பது புரிய வரும். அதனால் முதலில் இயற்கையைப் பற்றி சிறு வயதிலேயே மிகச் சரியாகப் புரிந்து கொண்டால் முன்னூறும் வாழ முடியும். அதற்கு மேலும் வாழமுடியும். அதற்குத் தயாராகினால் அனைத்தும் நமக்கு சாத்தியமே. உலகமே நம் கையில் (அறிவியல் வளர;ச்சியால்) என்பதுபோல் நம் வாழ்க்கை நம் கைகளுக்குள் வந்து விடும். வாழ நினைத்தால் வாழலாம்.
   

No comments:

Post a Comment