கொத்தமங்கலத்தில் முளைப்பாரித் திருவிழா. பல்லாயிரக் கணக்கான பெண்களுக்குக் கொண்டாட்டம்... ஆண்களுக்கும்தான்
கண்ணன்கணினி.
முளைப்பாரித் திருவிழா என்றால் கொத்தமங்கலம்தான். கொத்தமங்கலம் என்றால் முளைப்பாரித் திருவிழாதான். தமிழகம் எங்கும் பல்வேறு கிராமங்களில் இத்திருவிழா நடத்தப் படுவது வழக்கம். ஆனாலும் இத்திருவிழாவிற்குப் பெயர; பெற்ற கிராமமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலம் திகழ்கிறது.
கொத்தமங்கலம் பெரியகுளம்(ஏரி) பகுதியில் உள்வாய்ப் பகுதியில் பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் புதன்கிழமை முளைப்பாரித் திருவிழாவும் அடுத்த புதன்கிழமை மது எடுப்புத் திருவிழாவும் நடைபெறும்.
இது குறித்து இந்த ஊரைச் சேர;ந்த மணிவேல்சேர;வை என்பவரது மனைவி வௌ;ளையம்மாள் கூறுகையில் தலைமுறை தலைமுறையாக எங்கள் பகுதியில் இத்திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழா கிராமத்தின் முக்கிய நபர;களும் ஊர;ப்பிரமுகர;களும் இருந்து கலந்து பேசி முடிவெடுத்து ஆடி மாதத்தில் ஒரு புதன்கிழமையைத் தேர;வு செய்து விதை போட தண்டோரா மூலம் அறிவிக்கப்படும்(இப்போது மைக்செட்).
அதன்படி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் முன்பெல்லாம் மண்சட்டிகள் என்றாலும் நாகரீகம் வளர;ந்தபிறகு செப்பு மற்றும் சில்வர; பாத்திரங்களில் மண்ணும் எருவும் கலந்து வைத்து நவதானியங்களும் தூவப்பட்டு தண்ணீர; ஊற்றி இருட்டறையில் வைக்கப்படும். அதற்கு தினமும் பு+ஜைமுறைகளும் செய்விக்கப் படும். மேலும் காலை மாலை என இருவேளையும் தண்ணீர; ஊற்றப்படும். இருட்டறையிலும் கூடை போட்டுக் கவிழ்த்து வைத்து காற்றோட்டம் இருக்குமாறும் சூரிய வெளிச்சம் படாதவாறும் பாதுகாப்போடு வளர;க்கப்படும்.
அவ்வாறு விதைபோடுவதற்குக்கூட எங்கள் ஊரில் உள்ள தென்னம்பிள்ளைக்காரர;கள் வகையறாவிலிருந்து சங்கரன் குடியிருப்பைச் சேர;ந்த பு+சாரிகள் வீட்டுக்குச் சென்று கொடுத்து முதன்முதலில் போடுவார;கள். அதன்பிறகு ஊர;மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் போட்டு வளர;ப்பார;கள்.
விதைகள் மூன்று நாட்களில் முளைத்து விட்டாலும் அடுத்த நான்கு நாட்களில் ஒன்று முதல் ஒன்றரை அடிவரை பயிர;கள் வளர;ந்துவிடும். பச்சயம் இல்லாமல் வெளிர; நிறத்தில் வளர;ந்திருக்கும். இது உண்மையில் ஆடி மாதத்தில் விதைகள் விதைப்பதற்கு ஏற்றவகையில் உள்ளனவா என்பதை சோதித்து அறிந்து கொள்வதற்காக விவசாயிகள் செய்யும் சோதனையாக இருந்தாலும் பிடாரி அம்மனிடம் மழைவேண்டி நடத்தும் விழாவாகவும் நடத்தப் படுகிறது. இரவு நேரங்களில் பெண்கள் சேர;ந்து ஆங்காங்கே கும்மியடிக்கும் நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும். இந்தக் கும்மியடித்தல் நிகழ்ச்சியில் வயது வித்தியாசம் இல்லாமல் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை கலந்து கொள்வார;கள். விதை தூவியது முதல் மது எடுப்புத் திருவிழா முடியும்வரை 15-நாட்களுக்கு கிராமம் களைகட்டியிருக்கும். பெரும்பாலும் அசைவத்தை அந்த நாட்களில் தவிர;த்து விடுவார;கள்.
அவ்வாறு வீடுகளில் வைத்து வளர;க்கப் பட்டு அடுத்த புதன்கிழமை குடியிருப்புக் கோவில்களுக்கு அந்த முளைப்பாரிகளை எடுத்துக் கொண்டு வந்து வைத்து பு+ச்சுற்றி, அலங்காரம் செய்து வணங்கி கும்மியடித்து தலையில் சுமந்து வரிசையாகவும் கும்பலாகவும் வருவார;கள்.
கொத்தமங்கலத்தில் நான்கு திசைகளிலும் இருக்கும் அனைத்துக் குடியிருப்புகளில் இருந்தும் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மண்ணடித்திடல் என்ற இடத்தில் ஒன்று சேர;ந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்று பிடாரி கோவிலை அடைவார;கள். அங்கு கோவிலை மூன்று முறை வலம் வந்து கோவில் முன்புறம் உள்ள குளத்தில் பயிர;களைக் கொட்டிவிட்டு பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வீடு வந்துவிடுவார;கள் என்கிறார;.
அதேபோல் மறுவாரம் புதன்கிழமை பாளைஎடுப்புத் திருவிழா நடக்கிறது. அதாவது தென்னை மரத்திலிருந்து உடையாத பாளையை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து பாதியளவிற்கு பட்டையை உரித்து செப்புக்குடங்களில் செருகி அதற்கு முன்னதாகவே பிடாரியம்மனுக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையைக் குடத்துக்குள் போட்டு வைத்து விடுகிறார;கள். சிலர; நெல், சோளம் போன்ற தானியங்களையும் போட்டு வைக்கிறார;கள். அவ்வாறு போட்டு வைப்பதை பாளையெடுப்பு முடிந்தவுடன் அவற்றைக் கோயிலில் கொடுத்து விட்டு வருகிறார;கள். கொழுக்கட்டை பக்தர;களுக்கு பிரசாதமாகவும் தானியங்கள் அம்மனுக்கும் வழங்கப் பட்டு விடுகிறது. என்ற போதிலும் தென்னம்பாளையைச் செருகி வைத்துக் கொண்டு குடத்தை தலையில் சுமந்து ஆடும்போது குடம் கீழே விழுந்து விடாமல் சாய்ந்து விடாமல் இருக்க பேலன்சிற்காகப் போட்டு வைக்கப்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு தென்னம்பாளைகளைச் சுமந்து கொண்டு கோவிலுக்குச் செல்வதற்கு அந்த ஊரில் இருக்கும் பெண்கள் மட்டுமல்ல அதே ஊரில் பிறந்து வெளியு+ர;களுக்குத் திருமணம் செய்து கொடுத்திருக்கும் பெண்களும் வந்து உரிமையோடு கலந்து கொள்கிறார;கள். அவர;களுக்காக அவர;கள் பிறந்த வீடுகளில் பாளைக்குடம் தயாரித்து வைத்து விடுகிறார;கள். அதே போல் வெளியு+ர;ப் பெண்களும் விரும்பினால் இந்த விழாவில் கலந்து கொள்ளலாம்.
முளைப்பாரித் திருவிழாவிற்கு பயிர;ப்பாத்திரங்களைச் சுமந்து கொண்டு செல்லும் அதே வழித்தடத்தில்தான் கொண்டு செல்கிறார;கள் என்றாலும் இரு விழாக்களுக்கும் ஒரு சிறு வித்தியாசத்தைக் காண முடிகிறது. அதாவது முளைப்பாரி கொண்டு செல்லும்போது ரொம்பவும் ஆட்டம் ஆட மாட்டார;கள். ஆனால் பாளைக்குடம் சுமக்கத் துவங்கி விட்டாலோ ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். பாடுவது பிடாரியம்மன் மாரியம்மன் பாடல்கள் என்றாலும் ஒருவருக்கொருவர; இடித்துக் கொள்வதும் சேட்டைகள் செய்து கொள்வதும் அவர;கள் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தது, அவர;களின் மன எழுச்சிகளையும் ஆசைகளையும் மகிழ்ச்சியாக வெளிப்படுத்திக் கொள்வதும் கிராமத்துக் கேலிகளுக்கே உரித்தான கிராமத்து மகிழ்ச்சியான நல்ல கலாச்சாரத்துக்கே உரியனவாக இருக்கும். அவையெல்லாம் சாமி வந்து ஆடுவது போல் இருக்காது. உண்மையில் கிராமத்து மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியோடு திருவிழாக்கள் கொண்டாடுகிறார;கள் என்பதை மற்றவர;களுக்கு உணர;த்தும் விதமாகவும் அமையும்.
பெண்கள் இவ்வாறு ஆடிப்பாடி மகிழ்ந்து வருகிறார;கள் என்றால் அவர;களைக் காண ஆண்கள் வராமலா இருப்பார;கள்? நிச்சயமாக இருப்பார;கள். அந்தந்த வயதுக்கே உரிய தன்மையோடு அவர;களும் திருவிழா மகிழ்ச்சியைக் கொண்டாடுவார;கள். இத்திருவிழாவில் ஆசாபாசங்கள் இருக்குமேயன்றி ஆபாசங்கள் இருக்காது. இருபாலரும் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார;கள். இந்தக் கலாச்சாரத்தை கொத்தமங்கலம் கிராமத்து பாளையெடுப்புத் திருவிழா மூலம் மற்றவர;கள் உணர;ந்து கொள்ளலாம்.
முளைப்பாரி மற்றும் பாளையெடுப்பு ஆகிய இத்திருவிழாக்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆடிப்பாடி வருவதைக் காணும்போது ஆண்களுக்கு மட்டுமல்ல அதைக்காணும் பெண்களுக்கும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை நேரில் காண வேண்டும் என்றால் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் கொத்தமங்கலத்தில் நடக்கும் திருவிழாவின்போது வந்து பார;த்தால் தெரியும்.
சுமார; 25-ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இத்திருவிழாக்களின்போது பெண்களுக்கு முன் சிலம்பாட்டம் ஆடிச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இப்போது அந்தக் காட்சி மட்டும் மிஸ்ஸிங்.
No comments:
Post a Comment