Wednesday, September 23, 2015

புதுக்கோட்டையில் பு+ந்தோட்டமாக மாறிய கிராமம்.   
                                           
    கோடை வெய்யில் சுட்டெரிக்கிறது. வீட்டைவிட்டோ நிழலை விட்டோ வெளியில் வரமுடியவில்லை. ஏசி இல்லாத காரில்கூடப் பயணம் செய்ய முடியவில்லை. இந்த வெய்யில் காலத்தில் பலதரப்பில் உள்ளவர;களும் சிறிது ஓய்வு வேண்டும் என்று நினைப்பவர;கள் குற்றாலமோ ஊட்டியோ கொடைக்கானலோ தேர;வு செய்து அங்கு செல்ல நினைப்பார;கள். பெரும் பணக்காரர;கள் ஊட்டியிலும் கொடைக்கானலிலும் பண்ணைகளோ பண்ணை வீடுகளோ தோட்டம் துறவுகளோ வைத்திருப்பவர;களும் உண்டு. ஆனால் அதே கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் எல்லாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் இந்தக் கிராமத்திடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஆம். இப்போதுள்ள வறட்சியிலும் கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கும் பு+ச்செடிகளையும் அழகுச் செடிகளையும் மரக்கன்றுகளையும் வளர;த்து வைத்து கிராமத்தை அழகாக்கி வைத்திருப்பதுடன் அதன்மூலம் வருமானத்தைப் பெருக்கி தங்கள் வாழ்வாதாரத்தையும் வளமானதாக மாற்றியிருக்கிறார;கள் கிராமத்து மக்கள் என்றால் அனைவரையும் வியப்படைய வைக்கும்.
    புதுக்கோட்டையிலிருந்து 35-கிலோ மீட்டர; தூரத்தில் உள்ள கிராமம் கல்லுக்குடியிருப்பு. இந்தக் கிராமத்தில் மண்வளம் இல்லை. நீர;வளம் இல்லை. வெறும் கிராவல் மண் நிறைந்த பு+மி. மண்வெட்டி கொண்டு மண் வெட்ட முடியாது. கடப்பாறை கொண்டு குழிதோண்ட வேண்டும் என்றாலும் நாள் கணக்கில் ஆகும் அந்தப் பு+மியில் உள்ள மக்கள் இப்போது அழகிய கிராமமாக மாற்றிக் காட்டியிருக்கிறார;கள்.
    எப்படி முடிந்தது அவர;களால்? இந்த ஊரில் முதன் முதலாக கன்று வளர;த்த செல்லையா என்பவர; கூறுகையில் சுமார; 20 ஆண்டுகளுக்கு முன் அரிமளத்தில் ஒருவர; கன்றுகள் போட்டு வைத்திருந்தார;. அவரிடம் கன்றுகள் மொத்தமாக எடுத்து வந்து சைக்கிளில் கட்டிக் கொண்டு ஊர;ஊராகப் போய் விற்றேன். அதிலிருந்து நாமும் இதுபோல் உற்பத்தி செய்யலாம் என்று நினைத்து இங்கேயே கன்றுகள் உற்பத்தி செய்து விற்கத் துவங்கினேன். என்னுடன் கன்றுகள் விற்பனை செய்தவர;களும் கன்றுகள் உற்பத்தி செய்தது இன்றளவில் இந்தக் கிராமத்துக்குள் 94- பண்ணைகள் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றார;.
    இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர; சிதம்பரம் கூறுகையில் சுற்றி உள்ள ஊர;கள் எல்லாம் ஓரளவிற்கு தண்ணீர; வசதி இருந்தாலும் கல்லுக்குடியிருப்பு மட்டும் குடிதண்ணீர;கூட கிடைக்காத கிராமம். இங்குள்ள மக்கள் ஒரு காலத்தில் சாராயம் காய்ச்சி  விற்று வயிற்றுப் பிழைப்பு நடத்தும் அளவிற்கு மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருந்தோம். அதே போல் கூடைபின்னி விற்பது, அருகில் உள்ள வனத்துறைப் பகுதிக்கும் சுற்று வட்டாரக் கிராமங்களுக்கும் கூலிவேலைக்குச் செல்வது என்று மிகவும் தாழ்ந்த நிலையில்தான் இருந்தோம். வீட்டுக்குத்தேவை உப்பு, மண்ணெண்ணை, தீப்பெட்டிதான் அவசியம் என்று நினைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினோம். ஆனால் அதே உழைப்பை பு+க்கன்றுகள், மரக்கன்றுகள் வளர;ப்பதில் செலவிட்டதில் இன்று அனைவரும் நல்ல நிலைக்கு உயர;ந்திருக்கிறோம். படிக்க வாய்ப்பில்லாமல் இருந்த நாங்கள் எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கிறோம். இப்போது சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து பலரும் எங்கள் கல்லுக்குடியிருப்புக்கு வேலைக்கு வருகிறார;கள். பலருக்கும் வேலை கொடுக்கிறோம் என்பதில் கிராமத்துக்கே பெருமை.
    எங்களுக்கு முன் அரிமளத்தில் வைத்திருந்த கன்றுகளைப் பார;த்தாலும் அருகில் வனத்துறையில் தைலமரக்கன்றுகள் வளர;க்கும் முறையைப் பார;த்துதான் நாங்களும் கன்றுகள் உற்பத்தியை முறையாலகக் கற்றுக் கொண்டோம். முதலில் விதைக்கன்றுகள், பின்னர; ஒட்டுக்கன்றுகள், கலப்பினக் கன்றுகள், பு+ங்கன்றுகள், குரோட்டன்ஸ் வகைகள், மலைப்பகுதியில் மட்டுமே வளரும் என்று சொல்லப்படும் கன்று வகைகள் என்று அனைத்தும் உற்பத்தி செய்தோம். தொடக்கத்தில் சைக்கிளில் கட்டிக் கொன்று ஊர; ஊராகப் போய் விற்பனை செய்தோம். அதில் அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டும் வருமானம் கிடைத்தது.
    இங்கு கன்றுகள் உற்பத்தி செய்து மலிவான விலைக்கு வழங்குகிறோம் என்பதை அறிந்து மாவட்டம் முழுவதும் இருந்து நிறையப் பேர; வந்தார;கள். பின்னர; மற்ற மாவட்டங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கான கன்றுகளை வாங்கிச் சென்றதால் எங்களுக்கு ஓரளவிற்கு வருமானம் வரத்துவங்கியது. இப்போது கேரளா, கர;நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து வாங்கிச் செல்கிறார;கள். அதிகளவில் வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்று அதிக விலைக்கு விற்கிறார;கள். நாங்களும் அதிக லாபம் எதிர;பார;க்காமல் விற்கிறோம். நல்ல மழை பெய்யும் வருடம் லாபம் கிடைக்கும். இந்த ஆண்டு இருக்கும் கன்றுகளைக் காப்பாற்றி வைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. எப்படியும் இந்த ஆண்டு பருவமழை பெய்தால் இருக்கும் கன்றுகளை விற்று விட்டு பின்னர; உற்பத்தி செய்யலாம் என்ற நிலையில் இருக்கிறோம் என்றார;.
    மேலும் கன்று வளர;ப்பது குறித்து இதே ஊரைச் சேர;ந்த இன்னொரு செல்லையா என்பவர; கூறுகையில் ஒரு கூடை மண்கூடக் கிடைக்காத எங்கள் ஊரில் கன்றுகள் வளர;ப்பது மிகவும் சவாலான விஷயம். வெளியு+ர;களுக்குச் சென்று லாரியிலோ டிராக்டர;களிலோ மண் வாங்கி வந்து கன்றுகள் உற்பத்தி செய்கிறோம். அவ்வாறு விலைக்கு மண் வாங்கி டிராக்டர;களில் ஏற்றி வரும்போது வருவாய்த்துறையினரின் கெடுபிடிகளும் அதிகம். புதுக்கோட்டைக்கு வரும் மாவட்ட ஆட்சியர;கள் எங்களது இந்தக் கல்லுக்குடியிருப்பு கிராமத்திற்கு தவறாமல் வந்து பார;த்து விட்டு எங்களுக்கென்று ஏதாவது செய்வதாகச் சொல்கிறார;கள்.
    அதே போல் இந்த ஊர; கிராவல் பு+மியாக இருந்தபோதிலும் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரில்தான் கன்றுகள் வளர;க்கிறோம். அதற்கு மின் இணைப்புப் பெற்றிருக்கிறோம். எங்களுக்கு விவசாயத்திற்கு உள்ள மின்சாரம் தரமுடியாது என்று சொல்லி விட்டது மின்வாரியம். அதனால் தொழில்முறை மின்சாரம்தான். அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் மின்கட்டணத்தில் பாதியைக் குறைத்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும். கன்று விற்பதில் கிடைக்கும் லாபத்தில் பாதி மின் கட்டணத்துக்கே போய் விடுகிறது. மீதியில்தான் ஜீவனம் நடத்துகிறோம் என்றார;.
    இந்த ஊரில் முதன் முதலாக மகளிர; சுயஉதவிக் குழுக்களைத் துவக்கி அவர;களை கன்றுகள் வளர;ப்பதற்காகத் தயார; படுத்திய காமாட்சி கூறுகையில் 2001-வரை எழுதப் படிக்கவும் தெரியாமல் கூலிவேலைக்குச் சென்று கொண்டிருந்தோம்.
    கன்றுகள் உற்பத்தி செய்யத் துவங்கியவுடன் சென்னையில் வேளாண்துறையில் இருந்து எங்களது பு+ங்கன்றுகளையும் மரக்கன்றுகளையும் கொண்டுபோய்க் கண்காட்சிக்கு வைத்திருந்தோம். அப்போது முதல் பரிசு வாங்கி வந்தது எங்களுக்கு பெரும் ஊக்கமாக இருந்தது. அதனால் மகளிர; சேர;ந்து கன்றுகள் வளர;த்து பொருளாதாரம் ஈட்டினோம்.
    கேள்விப் பட்ட கலெக்டர; சுகந்தி வந்து பார;த்து எங்களுக்காக இரண்டு போர; போட்டுக் கொடுத்தார;. அது இரண்டும் பழுதாகி விட்டது. இப்போது ஆளாளுக்கு போர; போட்டு எல்லோரும் கன்றுகள் வளர;த்து சம்பாதிக்கிறோம். ஒற்றுமையாய் இருந்த சுய உதவிக்குழுவைக் கலைத்து விட்டோம். ஆனாலும் தனிப்பட்ட முறையில் அனைவரும் வளர;ச்சி பெற்றிருக்கிறோம். கன்றுப் பண்ணைகள் மட்டுமல்லாது அவற்றை விற்றுக் கொடுப்பதற்கு பத்துக்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் இருக்கிறார;கள். வீடு இருக்கும் இடமான ஐந்து சென்ட் பத்து சென்ட் இடங்களையே பு+ந்தோட்டமாக மாற்றியதில் ஊர;முழுவதும் அழகாக மாறி விட்டது. நிலம் அதிகமாக வைத்திருப்பவர;கள் பெரும் பண்ணைகளும் வைத்திருக்கிறார;கள் என்றார;.
    கிராமப் பகுதிகளில் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று.

No comments:

Post a Comment