Wednesday, September 23, 2015

கடலுக்குள் நாங்கள் 12-நாட்டிக்கல் மைல் மட்டுமே போய் பாதுகாக்க முடியும் என்று கடலோரப் பாதுகாப்புக் காவல்துறைத் தலைவர; அளித்த பேட்டி மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.
    கடலோரப் பாதுகாப்புக் காவல்துறைத் தலைவர; 13.2.2015-அன்று பகலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர;களின் குறைகளைக் கேட்டறிய வந்திருந்தார;. அப்போது அவரிடம் அங்கிருந்த இலங்கைத் தமிழர;கள் குடிநீர; வசதிபோதாது, மின்சாரம் சில வீடுகளில் இல்லை, சில வீடுகளில் மேற்கூரைகள் மாற்ற வேண்டும் என்ற சிறுசிறு குறைகளைத் தெரிவித்தார;கள். (அதுதானே அவர;களுக்குப் பெரிய குறையே)
    அதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர; கணேஷ் உடனடியாக ஒன்றிய ஆணையரை அழைத்து 24-மணி நேரமும் இலங்கை அகதிகளுக்கு தடையில்லா மின்சாரமும் குடிநீரும் வழங்க அரசு அறிவித்துள்ள அறிவிப்பைச் சுட்டிக் காண்பித்து தோப்புக்கொல்லை முகாமில் உள்ளவர;களுக்கு உடனடியாகச் செய்துதர உத்தரவிட்டார;. அதே போல் மற்ற முகாம்களிலும் உள்ளவர;களுக்குச் செய்ய வேண்டி கோட்டாட்சியருக்கும் உத்தரவிட்டார;.
    அடுத்து பேசவந்த கடலோரப் பாதுகாப்புக் காவல்துறைத் தலைவர; சொக்கலிங்கம் இலங்கையிலிருந்து இந்தியாவில் வந்து தங்கியிருக்கும் மக்களுக்கு 1991-ஆம் ஆண்டு இருந்த நிலையை மாற்றி அனைத்து வசதிகளையும் செய்து தந்திருக்கிறது. அதனால் யாரும் இங்கிருந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தப்பிப் போய்விடலாம் என்று நினைக்க வேண்டாம். யாரும் தங்கம் கடத்துகிறார;களா என்பதைக் கண்காணித்துக் கொள்ளுங்கள்.
    கடத்தலில் ஈடுபட்ட பிடிபடுபவர;கள் பெரும்பாலும் இலங்கைத் தமிழர;கள் வாழும் பகுதிகளில் பதிவில்லாமல் வாழ்பவர;களாக இருக்கிறார;கள். பாகிஸ்தான் உளவாளியாகச் செயல் பட்டு வந்த அருட்செல்வராஜ் என்பவன் ஆறுமாதத்திற்கு முன் பிடிபட்டான். அவனும் இப்படித்தான் இருந்து பிடிபட்டிருக்கிறான். அதனால் புதியவர;களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்புவது என்பது இங்கிருக்கும் காவல்துறையோ வருவாய்த்துறையோ எடுக்கும் நடவடிக்கை இல்லை. அது இந்திய அரசு எடுக்கும் முடிவைச் சார;ந்தது என்றார;.
    நிருபர;களுக்குப் பேட்டியளித்தபோது இதுவரை ஆறு மாவட்டங்களில் 22-முகாம்களில் இதுபோல் சோதனை நடத்தியிருக்கிறேன். இங்கேயே இருப்பவர;கள் நன்றாகத்தான் இருக்கிறார;கள். வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கிளம்புபவர;கள்தான் மிகவும் சிரமப்படுகிறார;கள். இங்கு வந்து படித்தவர;கள் டாக்டர;களாகவும் பொறியாளர;களாகவும் இருக்கிறார;கள். இங்கிருப்பவர;களுக்கு உயர;படிப்பு ஒரு தடையில்லை என்றார;.
    வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்குள் தங்கம் கடத்தி வருவது இப்போது அதகரித்துள்ளதே என்று கேட்டபோது நாங்களும்தான் ராமநாதபுரத்தில் 35-கிலோ தங்கம் பறிமுதல் செய்துள்ளோம்.
    கடல்வழியாகக் கடத்தப் பட்டு வரும் தங்கம் கடலோரப் பாதுகாப்புப் படைக்குத் தெரியவில்லையே என்றதற்கு அதுதான் இங்கே வைத்துப் பிடித்திருக்கிறோமே என்று சொல்லி வேறு சப்ஜெக்டுக்கு மாறினார;. தமிழகத்தில் கடலோர மீனவர; கிராமங்களாக 596-கிராமங்கள் இருக்கின்றன. கடலோரத்தைப் பாதுகாக்க 1500-பேர; அந்தப் படையில் நியமிக்கப் பட்டிருக்கிறார;கள். இந்தப் பகுதிகளில் 30-காவல் நிலையங்கள் இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 32-மீனவர; கிராமங்கள் இருக்கின்றன.
    கடலோரத்தைப் பாதுகாப்பதில் மீனவர;களுக்கு விழிப்புணர;வு ஏற்படுத்துவற்காகவும் அவர;களின் குறைகளைக் கேட்டறிவதற்காகவும்தான் இந்த குறைகேட்பு மற்றும் விழிப்புணர;வுக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த விழிப்புணர;வு இலங்கை அகதிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதால்தான் புதுக்கோட்டை வாழ் இலங்கை அகதிகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
    இவர;களுக்குள் தங்கி இருந்துதான் கடத்தல்பேர;வழிகளும் ஆயுதம், வெடிமருந்து போன்றவை கடத்துபவர;களும் செல்கிறார;கள். அதனால் இவர;களுக்கு விழிப்புணர;வு ஏற்படுத்தி விட்டால் அவர;கள் நமக்குத் தகவல் தருவார;கள். குற்றங்கள் குறையும். மும்பையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தின்போது மீனவர;களுடன் இருந்துதான் பாகிஸ்தான் உளவாளி வந்திருக்கிறான் என்கிறபோது இங்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது என்றார;.
    கடல்வழியாகக் கடத்தி வரப்படும்போது குற்றவாளிகளை ஏன்கடலோரக் காவல்படையினர; பிடிப்பதில்லை என்று கேட்டதற்கு கடலுக்குள் நாங்கள் 12-நாட்டிக்கல் மைல் மட்டுமே போய் பாதுகாக்க முடியும். அதற்கு அப்பால் போகமுடியாது. துறையில் 1500-பேர; மட்டுமே வேலை செய்வதால் ஆட் பற்றாக்குறையும் உள்ளது என்று சொல்லி முடித்துக் கொண்டார;.
    இரண்டு நாட்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றான மீமிசலில் இதேபோல் கடலோரப் பாதுகாப்புக் காவல்துறைத் தலைவர; சொக்கலிங்கம் பேசி முடித்தபிறகு குற்றவாளிகளைக் கண்டறிந்து சொன்னால் எங்களுக்குத்தான் சிக்கல். எங்களுக்கு என்ன பாதுகாப்புத் தருவீர;கள் என்று அங்கிருந்த இளைஞரான முத்துராக்கு என்ற மீனவர; கேட்டிருக்கிறார;.
    அந்த இளைஞரை தொலைபேசியில் தொடர;பு கொண்டு கேட்டபோது நான் காவல்துறைத் தலைவரிடம் கேட்டது உண்மைதான். கடலில் ரெட்டைமடிவலை வீசி அனைத்தையும் சுருட்டிவரும்போது சங்கு, பாசி, நத்தை, குப்பை கூளம் எல்லாவற்றையும்தான் அரித்தெடுத்து வருகிறது. ஆனால் போன மாதம் முத்துக்குடா பகுதியைச் சேர;ந்த மல்லிகைசேகர; என்பவர; ஐந்து விரல் சங்கு பிடித்து வைத்திருக்கிறார; என்று சொல்லி கடலோரக் காவல் படையினர; கைது செய்து அறந்தாங்கி சிறைக்கு அனுப்பி விட்டார;கள். 15-நாள் சிறைவாசத்திற்குப் பிறகு இதுவரை கண்டிசன் பெயிலில் கையெழுத்து போட்டு வருகிறார;.
    இது சங்கு போன்ற பொருட்களை கடலில் இருந்து எடுத்துவரக் கூடாது என்றும் அதற்கு வனத்துறையினர; ஏதாவது குறிப்பு எழுதினால் சிறையில் தள்ளப்படுவோம் என்பதும் அதற்கு அப்புறம்தான் தெரியும். கன்னியாகுமரியில் மலைபோல் குவித்து வைத்து வியாபாரம் செய்கிறார;கள். ஆனால் இங்கு கைது செய்கிறார;களே என்று ஆவேசப் பட்டு மல்லிகை சேகரை சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு வர விவரம் சேகரித்தபோதுதான் சங்கு மட்டுமல்ல 52-வகையான பொருட்களை எடுத்து வந்தால் சிறை உறுதி என்று தெரிந்தது.
    ஆனால் அந்த 52-வகையான பொருட்கள் என்னென்ன என்பது கடலோரக் காவல் படையினருக்கோ வனத்துறையினருக்கோ வழக்கு பதிவு செய்த குற்றவியல் போலீசாருக்கோகூடத் தெரியவில்லை. அப்புறம் படிக்காத எங்களைப் போன்ற மீனவர;களுக்கு என்ன தெரியும்? அந்தப் பட்டியலைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தபோது மல்லிகைசேகர; வைத்திருந்தது ஐந்து விரல் சங்கு என்பதும் அதை எடுத்தது குற்றமல்ல என்றும் தெரிய வந்தபிறகுதான் பெயில் கிடைத்தது. எட்டு விரல் சங்கு வைத்திருந்தாலோ விற்றாலோ குற்றம் என்கிறது சட்டம்.
    இதைப்போய் ஐந்து விரலா எட்டு விரலா என்று ஆராய்ச்சி செய்யக் காத்திருக்கும் கடலோரக் காவல்படையினர; தமிழகக் கடற்கரை ஓரங்களிலே இருப்பவர;களைக் கூட தூக்கிச் செல்லும் இலங்கைக் கடற்படையினரை விரட்டிப் பிடித்ததுண்டா? அதைக் கேட்டதற்காகத்தான் இப்போது நடந்தது எதுவானாலும் பேசித் தீர;த்துக் கொள்வோம். இனிமேல் யாரும் வந்தால் தொலைபேசியில் சொல்லுங்கள் என்று சொல்லி எங்களைச் சமாதானம் செய்து கொண்டிருக்கிறார; ஐஜி என்றார;.

No comments:

Post a Comment