Sunday, September 27, 2015

eyarkai maruthauvam

bloggersmeet2015@gmail.comஇந்தக் கட்டுரை எனது சொந்தப் படைப்பாகும். வேறு யாருக்கும் அனுப்பவில்லை. வேறு எந்த ஒரு இதழிலோ மின்னிதழிலோ பிரசுரமாகவில்லை. 2015 வலைப்பதிவர; திருவிழாவிற்காக அனுப்பப் பட்ட படைப்பாகும். முடிவு வெளியாகும்வரை வேறெதிலும் வெளிவரமாட்டாது என்பதற்கும் உறுதியளிக்கிறேன். நன்றியுடன் ம.மு.கண்ணன்.

இயற்கையோடு வாழ நினைத்தால் வாழலாம்.

(கண்ணன்கணினி.)


    மருத்துவம் என்னும் ஆறெழுத்து மந்திரம் இன்று பலரையும் உயர;த்தியிருக்கிறது. யாரை என்றால் மருத்துவர;களை. நோயில் விழுந்தவர;களைக் காப்பாற்றியதால் அவர;களது தட்சணையில் மருத்துவம் செய்தவர;கள் உயர;ந்திருக்கிறார;கள். ஆனால் ஒரு முறை நோயில் சிக்கியபிறகும் விழிப்பாக இல்லாதவர;கள் மீண்டும் மீண்டும் நோயில் விழுந்துகொண்டேயிருக்கிறார;கள். அவ்வாறு விழுந்து விட்டவர;களையும் நோய் வராமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர;களுக்காகவும்தான் இந்த சிறு கட்டுரை.
    நமக்கு ஆயுள்பலம் என்ன என்று இதுவரை அறிந்திருக்கவில்லை. அதனால் எப்போது இறப்பு வந்தாலும் இறந்து விடுவோம் என்ற தவறான ஒரு நம்பிக்கையை நமக்குள் விதைத்து வளர;த்து வைத்துக் கொண்டிருக்கிறோம். நம் உடம்பும் உயிரும் நம் கையில் இருக்கிறது என்பதை அறியத் தவறி விடுகிறோம். ஒருவரைப் பார;த்து உங்களால் எவ்வளவு காலம் உயிர; வாழமுடியும் என்று கேட்டால் அது என்ன என் கையிலா இருக்கிறது என்பார;கள். கேட்பவரும் ஒத்துக் கொள்ளும் விதமாக அது இருக்கும்.
    நமது வாழ்நாள் பழங்காலத்தில் அதிகமாக இருந்தது என்றும் இல்லையில்லை பழங்காலத்தில் குறைவாக இருந்தது, இப்போது மருத்துவத் துறையின் அபார வளர;ச்சியால் வாழ்நாள் வருடங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன என்றும் பட்டி மன்றம் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக்கேட்டு அதைப்பற்றிக்கூட யோசிக்க நேரமின்றி இயந்திர மனிதர;களாக நம் சூழ்நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.
    நமது வாழ்நாள் வயது 300-ஆண்டுகள் என்றால் சற்று கிறுகிறுப்பு வரத்தான் செய்யும். அவ்வளவு காலம் வாழ முடியுமா? என்ற சந்தேகம் நமக்கு வரும். வாழ முடியும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதைச் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கும். எந்த ஓர; உயிரினத்துக்கும் அதன் பருவ காலத்தைப்போல 20-மடங்கு அதன் வயது ஆகும்.
    ஒரு முயல் பிறந்தவுடன் மூன்று மாதங்களில் பருவத்திற்கு வந்து விடுகிறது. அதன் வயது ஐந்து ஆண்டுகள். அதாவது 3பெருக்கல் 20 எனில் 60மாதங்கள். அதாவது ஐந்து ஆண்டுகள். ஓர; ஆட்டுக்குட்டி பிறந்து விட்டால் ஆறு மாதங்களில் பருவத்திற்கு வருகிறது. அதன் 20-மடங்காக 10ஆண்டுகள் உயிர; வாழ்கின்றன. பசு கன்று போட்டால் அந்தக்கன்றுக்குட்டி ஓர; ஆண்டில் பருவத்திற்கு வருகிறது. அதன் 20-மடங்காக 20-ஆண்டுகள் உயிர; வாழ்கின்றன. அனைத்து இயந்திரங்களுக்கும் சக்தி கணக்கை அளிக்கும் குதிரைக்குட்டி 2-வயதில் பருவத்திற்கு வருகிறது. அதன் 20-மடங்காக 40-ஆண்டுகள் உயிர; வாழ்கின்றன. இது ஒவ்வோரு உயிரினத்துக்கும் பொருந்தும். அது மனித இனத்துக்கும்தான்.
    அப்படிப் பார;க்கும்போது மனித இனத்துக்கு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சற்றேறக்குறைய 15வயதில் பருவத்திற்கு வருகிறார;கள். சிலர; 12, 13ஆகவோ 17-வயதாகவோகூட இருக்கும். சராசரியாகப் பார;த்தால் 15வயது என்பது சரியாக இருக்கும். அதன் 20மடங்கு என்பது 300-ஆண்டுகள் என்பது இயற்கையின் நியதிப்படி சரியான வயதாகும்.
    இது அறிவியல் பார;வையிலும் வரலாற்றுப் பார;வையிலும் இயற்கையைச் சோதித்ததிலும் கிடைத்த உண்மை. வால்கா முதல் கங்கைவரை என்ற நூலில் பல்வேறு காலகட்டங்களிலும் உள்ள  வாழ்நிலையைப் பதிவு செய்திருப்பார; அதன் ஆசிரியர;. மத நம்பிக்கையும் சில நேரங்களில் அதை வலியுறுத்துகின்றன. ஆனால் அதைக் கடைப்பிடிக்கத் தவறியதால்தான் மனிதனின் ஆயுள்காலம் குறைந்து கொண்டே வந்திருக்கிறது.
    இப்பவும் சர;க்கரை நோய் தந்தைக்கு இருந்தால் பிள்ளைகளுக்கு வந்து விடும் என்று நம்புகிறோம். தந்தைக்கு 60வயதில் வந்தது. பிள்ளைக்கு 50வயதில் வந்தது. பேரனுக்கு 40-வயதிலேயே வந்து விட்டது என்பதை ஒப்புக் கொள்கிறோம். அப்படித்தான் வயது குறைந்து விட்டது. இதே தத்துவத்தை நம் முன்னோர;கள் நம்மிடம் சொல்லும்போது எங்கள் முப்பாட்டனார; 120வயது வரை வாழ்ந்தார;. எங்கள் பாட்டனார; 110வயது வரை வாழ்ந்தார;. என் தந்தையார; 100-வயது வரை வாழ்ந்தார;. எனக்கு 85வயது ஆகிறது. என் தந்தையார; வயதுவரை வாழ்ந்து விடலாம் என்று பார;த்தால் இப்போது மூச்சு முட்டுகிறது. இன்னும் ஓர; ஐந்து வயது வாழ்ந்து வரலாற்றை நிறைவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொல்வதைப் பார;க்க முடிகிறது. அப்படி என்றால் நம் நிலை என்னவாக இருக்கும்? என்னவோ இருக்கும்வரை இருப்போம். போகிற போது போக வேண்டியதுதான் என் மனநிலை சாதாரணமாக வந்து விடுகிறது.
    அதை மாற்ற வேண்டும். அது சற்று கடினமானதுதான். போராட்டமே வாழ்க்கை என்ற நிலையைச் சற்று மாற்றி வாழ்வதற்காக நாம் போராட வேண்டியிருக்கும். காரணம் வாழும் வயதை அதிகரிக்கச் செய்யும் சுயபோராட்டமாகும். அது நமக்கு மட்டுமல்ல. நம் சந்ததியின் வயதையும் அதிகரிக்கச் செய்ய வேண்டிய போராட்டம். நம் தந்தையின் வயதைவிட பத்திருபது வயது கூட்டுவதற்கு நாம் போராடிக் கூட்டினால் நம்வயதை விட நம் பிள்ளைகளின் வயதை இன்னும் ஒரு பத்திருபது வயதை அதிகரிக்கச் செய்ய அவர;களைப் போராடத் தயார; படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் நூறு வயது  வாழ்ந்தால் நம் பிள்ளைகள் நூற்றிருபது வயதுவரை வாழ்வதற்குத் தயாராகுவார;கள். அவர;களது பிள்ளைகள் 140-வயது வரை வாழ்வார;கள். இது நடக்குமா? என்றால் நிச்சயம் நடக்கும். இதுபோலவே பத்திருபது தலைமுறைகள் கடந்தால் நம் தலைமுறையின் வாரிசுகள் நிச்சயமாக 300-ஆண்டுகள் உயிர; வாழ முடியும். அதுவரை நம் சந்ததியினரைப் பழக்கப்படுத்திக் கொண்டு வருவதானது சகலத்தையும் உணர;ந்திருந்தால் முடியும்.
    பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த உயிரினங்களுக்கும் இந்த ஆயுள்காலம் சரியாக இருக்கிறது. இப்போது இருக்கும் உயிரினங்களுக்கும் இந்த கணக்கு சரியாக இருக்கிறது. மனிதனுக்கு மட்டும் மாறிவிட்டது. ஏன் என்றால் உணவுமுறை மாறிவிட்டது. அதனால் வாழ்நாளும் குறைந்து வந்து விட்டது. நம் முப்பாட்டன் திருவள்ளுவர; குறைந்தது 300-ஆண்டுகளாவது உயிர; வாழ்ந்திருந்தால் மட்டுமே 1330-குறட்பாக்களுக்குள் உலக விசயங்கள் அனைத்தையும் அடக்கியிருக்க முடியும். அது உலகப்பொதுமறையாகவும் படைத்திருக்க முடியும். திருவள்ளுவர; வயதிலும் சிறு தவறை நாம் செய்திருக்கிறோம். அவரது பிறப்பை வைத்து இதுவரை திருவள்ளுவர; ஆண்டு சொல்லிக் கொண்டிருக்கிறோமே தவிர எப்போது பிறந்தார; எப்போது மறைந்தார; என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை.
    சரி நம் சந்ததியினர; 300- உயிர; வாழ்வது இருக்கட்டும். நாம் 100வயதுவரையாவது வாழ வேண்டாமா? அதற்கு மேல் வாழ இப்போது தயாரானாலேபோதும். அது இருக்கட்டும். உயிர;மீது ஆசை கொண்டவர;கள் அதற்கு மேலும் வாழட்டும். ஆனால் நூறுவயது சாத்தியம் என்பது கண்ணுக்கு முன்னால் உண்மை என்றபோது அதுவரை நோய்நொடியின்றி வாழ வேண்டாமா? வாழ வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதற்கு சில உணவு முறை மாற்றங்களைச் செய்து கொண்டாலேபோதும்.
    நமக்குச் சில தவறான புரிதல்கள் உண்டு. அதில் உதாரணத்திற்கு ஒரு குறளைக் குறிப்பிட விரும்புகிறேன்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்- என்ற குறட்பாவிற்கு ஏற்கனேவே உண்ட உணவு செறித்தபின் உணவு உண்டால் யாக்கை என்று சொல்லக்கூடிய இந்த உடம்புக்கு மருந்து என்று ஒன்று வேண்டாம் என்ற பொருளாகும் என்று இதுவரை பொருளுரை சொல்லி வரப் பட்டுள்ளது. அதற்கு நாம் மறுக்கவும் இல்லை. ஆனால் அதைச் சற்று மாற்றியும் யோசிக்க வேண்டும்.
    அதாவது மருந்து என யாருக்கு வேண்டாம் என்றால் அருந்தியதை அற்றுப் போகச் செய்வதை போற்றி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார;. அதாவது நூறுகிராம் எடைகொண்ட பாலைச் சாப்பிட்டால் 70-கிராம் எடையுள்ள தண்ணீர;தான் வெளியேறும். 100-கிராம் எடையுள்ள பழச்சாறு உட்கொண்டால் 60-கிராம் எடைகொண்ட கழிவுகள்தான் வெளியேறும். மற்றவை உடலில் தங்கிவிடும். அன்னப்பால் என்று சொல்லக்கூடிய நீராகாரம் 100-கிராம் எடை உட்கொண்டால் 90-கிராம்தான் வெளியேறும். ஆனால் 100-கிராம் எடைகொண்ட தண்ணீரை உட்கொண்டால் அது 110-கிராம் எடைகொண்ட கழிவுகள் அது சிறுநீராகவும் வியர;வையாகவும் வெளியேறும். அதாவது உடலில் உள்ள 10-கிராம் எடைகொண்ட நச்சுப் பொருட்களை நச்சு உப்புக்களை வெளியே கொண்டு வந்து விடுகிறது. அவ்வாறு அற்றதை அற்றுப்போகச் செய்யும் தண்ணீரை உணவாக உட்கொண்டு உயிர;வாழப் பழகிக் கொள்ளும் உடம்பிற்கு மருந்து என்று ஒன்று தனியாக வேண்டியதில்லை என்கிறார; நம் திருவள்ளுவர;. அதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்றால் மற்றவர;களைப் பார;த்து முடிவுக்கு வர முடியாது. தான் பழகிப் பார;த்தால் மட்டுமே முடியும். அதற்குக் குறைந்தது ஒருமாதத்திலிருந்து ஆறுமாதம்வரைகூட ஆகலாம். அதை உடனே ஒரு முடிவுக்கு வர முடியாதவர;கள்கூட ஒரு வருடத்தில் பழகியும் பயிற்சி எடுத்தும் கடும் முயற்சி செய்தும் கண்டு கொள்ளலாம்.
    அதற்குச் செலவில்லை. சிரமம் இல்லை. முயற்சி இருந்தால் மட்டும் அறிந்து கொள்ளலாம். அதைத்தான் அருமையாக ஒன்றே முக்கால் அடியில் சொல்லியிருக்கிறார; நம் பாட்டனார; திருவள்ளுவர; அவர;கள். இதை வலியுறுத்திச் சொல்லும் நான் எனக்கு வந்த பலநோய்களுக்கு வெறும் தண்ணீரை மட்டும் பயன்படுத்தி குணப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சில தேவைகளுக்காகவும் ஆய்வுக்காகவும் எனக்கு நானே வலிய நோயை வரவழைத்து அதற்கு இந்த தண்ணீர; எனும் மருந்தைக் கொண்டு குணப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் பெற்ற பலனை மற்றவர;களுக்கும் பயன் படுத்தி ஏராளமான நபர;களைக் குணப்படுத்தியும் இருக்கிறேன். இந்தப் பயிற்சியானது எந்தப் பணியில் இருப்பவர;களுக்கும் உயிர;மீது அக்கறை கொண்டவர;களுக்கும் சாத்தியப்படும். அதைத்தான் வள்ளுவர; சொல்லியிருப்பதாக வேறு சிலரும் சொன்னதன் பொருளைப் புரிந்து கொண்டு பயன்படுத்திப் பார;த்து நான் எடுத்துக் கொண்டேன்.
    தண்ணீரை உணவாகப் பயன்படுத்துவது முதலில் பயிற்சி எடுத்துக் கொள்ளும்போது சிரமமாகத்தான் இருக்கும். அதற்காக முதலில் உணவின் அளவைக் குறைத்து விட்டுச் சிலகாலம். அதன்பிறகு இயற்கை உணவுகளை உட்கொண்டு சில காலம். பிறகு அளவைக் குறைத்து சிலகாலம் என மற்றவற்றைக் குறைத்து விட்டு தண்ணீரை மட்டும் அதகரித்துக் கொண்டே வர இது சாத்தியமாகும் என்பது எளிமையான உண்மை.
    இவ்வாறு வாழ்பவர;கள் நம்மில் பலரும் இந்த 2015-லும் இருக்கிறார;கள் என்று சொல்லும்போது நமக்குமட்டும் சாத்தியப்படாதா என்ன? கோவை பொறியாளர; வெங்கடேசன், கோபிச்செட்டிபாளையம் முன்னாள் ராணுவ வீரர; இனியன், ஆசிரியர; மற்றும் பொறியாளர; இளங்கோ ஆகிய மூவரைத் தவிர இன்னும் நிறையப் பேர; இருக்கிறார;கள். அவர;களுக்கு இது சாத்தியப்படும்போது மனிதனுக்கு மருத்துவம் என்ற நிலையே இருக்காது. இப்பொழுதும் பாருங்கள் தான்தோன்றித்தனமாக இருக்கும் விலங்கினங்களுக்கு மருத்துவம் தேவைப்படுவதில்லை. அதன் இயற்கை நிலையை மாற்றி அடைத்தும் கட்டிப்போட்டும் வளர;க்கும் விலங்கினங்களுக்கு மட்டுமே நோய் வருகின்றன. குறிப்பாக இயற்கையோடு ஒன்றி இருக்கும் விலங்கினங்களுக்கும் தேவைப்படுவதில்லை. ஆனால் மரபணு மாற்றம் செய்த விலங்கினங்களுக்கு மட்டும் அடையாளம் தெரியாத நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் இயற்கையை மாற்றும்போதுதான் நோய்கள் அதிகரித்து வயது குறைகின்றனவே தவிர இயற்கையைக் கடைப்பிடிக்கும்போது எந்த ஒரு பாதிப்பும் வருவதில்லை.
    விருந்து என்றால் அறுசுவை உணவு என்கிறோம். ஆறுசுவை உட்கொள்ளுகிறோமா? இனிப்பு, உப்பு, துவர;ப்பு, கார;ப்பு, புளிப்பு என்று எடுத்துக் கொள்ளும் நாம் அதற்கு இணையாக கசப்பை விட்டு விடுகிறோமே! அப்புறம் மற்ற சுவைகளால் வரக்கூடிய பாதிப்பைச் சரிசெய்யும் கசப்புக்கு என்று தனியாக மருந்து எடுத்துக் கொள்ளும் நிலை வந்து விடுகிறது. ஆனால் அனைத்தையும் சரி செய்யக் கூடியது தண்ணீரில் மட்டும் உள்ளது. அதையும் தாண்டி பஞ்ச பு+தங்களையும் பயன்படுத்தி வாழக் கற்றுக் கொண்டால் சித்தர;களின் வாழ்வியலாகும். அது நமக்கு வேண்டுமா வேண்டாமா என்பது வேறு. அது விருப்பப்பட்டவர;கள் மட்டும் தேர;ந்தெடுக்கும் வழியாகும்.
    ஆனால் நோயின்றி வாழ சாதாரண உணவுப் பழக்க மாற்றம் மட்டுமே போதுமானது. அதையும் கற்றுக் கொண்டு முழுமையான பயிற்சியை எடுத்துக் கொண்டு பின்னர; விட்டு விடலாம். தேவைப்படும்போது மட்டும் கடைப்பிடித்துக் கொண்டாலே நூறு வயதுவரை நோய் நொடியின்றி வாழ முடியும் என்று சொல்லும்போது அனைவரும் முன்வரலாமே.
    சில ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில கிராமங்களில் மர;மக்காய்ச்சல் என்றொரு நோய் வந்தது. டெங்கு என்று பெயர; சூட்டி அழைக்கப் பட்டது. அதில் சிலர; இறந்து போய் விட்டார;கள். அப்போது பொதுமக்கள் விழித்துக் கொண்டார;கள். அதனால் அரசு மருத்துவ மனைகளின் மீது இருந்த நம்பிக்கையை இழந்து தனியார; மருத்துவ மனைகளுக்குக் கொண்டு செல்லத் துவங்கினார;கள். அங்கு கொண்டு சென்றும் பலர; இறந்தார;கள். மக்கள் பீதியடைந்தார;கள். தனியார; மருத்துவ மனைகளுக்குக் கொண்டு சென்றபோதிலும் சில லட்சங்களைச் செலவு செய்து காப்பாற்றினாலும் சாதாரண காய்ச்சலுக்குக்கூட மக்கள் பயந்தார;கள். நிலத்தை விற்று மட்டுமல்ல தாலியை விற்றுக் கணவரைக் காப்பாற்றிய பெண்கள் உண்டு என்றால் அந்தக் காய்ச்சலின் உக்கிரம் எந்தளவிற்கு மக்களைப் பாதித்திருக்கும் என்று நினைவு படுத்தி அறிந்து கொள்ளலாம்.
    மருத்துவ மனைகள் தோறும் மரண ஓலங்கள். சிறுசிறு மருத்துவ மனைகள் எல்லாம் மிகப் பெரிய மருத்துவ மனைகளுக்கு பரிந்துரை செய்து நோயாளிகளை அனுப்பிக் கொண்டிருந்தன. அங்கும் செத்து விழுந்து கொண்டிருந்தால் என்னதான் செய்வார;கள் பாவம். ஒவ்வொரு நோயாளிகளிடமிருந்தும் லட்சங்களைப் பெற்றுக் கொண்ட மருத்துவமனை நிர;வாகங்களால் உயிர;களைக் காப்பாற்ற முடியாமல் திணறின. மருத்துவ மனைகளின் படுக்கைகளில் மட்டுமல்ல தாழ்வாரங்களில்கூட மர;மக்காய்ச்சல் நோயாளிகளும் அவர;கள்தம் உறவினர;களும்தான்.     ஆனால் அரசு மருத்துவ மனைகளில் காற்று வாங்கியது. அரசுமருத்துவர;கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார;கள். கேட்டால் எங்களிடம் உரிய மருத்துவ உபகரணங்கள் இல்லை. மர;மக் காய்ச்சலுக்கு சோதனை செய்யும் கருவிகள் அங்குதான் இருக்கின்றன என்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார;கள்.
    ஒரு கட்டம்வரை பொறுத்துப் பார;த்த பொது மக்கள் எங்களைக் காப்பாற்று அரசே என வீதிகளில் வந்து போராட்டம் நடத்தத் துவங்கினார;கள். அதுவரை சித்த மருத்துவத்தில் குணமாகிவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்த சித்த மருத்துவர;களின் குரல் எடுபடவில்லை. மக்கள் போராட்டத்திற்குப் பிறகு எடுபட்டது. சித்த மருத்துவர;கள் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து எழுந்த குரல் எடுபட்டது. அரசு ஏற்றுக் கொண்டதோ ஏற்றுக் கொள்ளவில்லையோ தெரியாது. அந்த மருந்தைப் பரிந்துரை செய்து தொலைக் காட்சிகளின் மூலம் எடுத்துச் சென்றது. அதை எடுத்துச் சொல்லவும் திரைப்பட நட்சத்திரங்கள் தேவைப் பட்டார;கள். திரைத்துறையினர; சொன்னவுடன் மர;மக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர;கள் தாங்களே அந்த மருந்தைத் தயாரித்து உட்கொண்டார;கள். காய்ச்சல் பறந்து ஓடிவிட்டது.
    அந்த மருந்துதான் நிலவேம்புக் கசாயம், ஆடாதொடைக் கசாயம், பப்பாளி இலைச்சாறு. இந்த மூன்றில் எதைக் கொடுத்தாலும் குணமானது. மூன்றையும் கொடுத்தாலும் குணமாகி விட்டது. பக்க விளைவுகள் ஏதுமில்லாமல் இருந்தது. இன்றளவும் இந்த மூன்று கசாயத்தைக் கண்டு டெங்கு எட்டிப்பார;க்கவில்லை. இந்த நோய்க்காக மருத்துவ மனைகளில் யாருமில்லை. சில நேரங்களில் வந்த காய்ச்சல் நோயாளிகளைச் சோதித்ததில் யாருக்கும் டெங்கு இல்லை என்றால் டெங்கு யாருக்குச் சொந்தம் என்றும் மேற்சொன்ன, கடைப்பிடித்த, டெங்குவை ஓடஓட விரட்டியடித்த நம் வீட்டில் முளைத்துக் கிடந்த தாவரங்கள் யாருக்குச் சொந்தம் என்றும் எண்ணிப் பார;த்து விட்டு இயற்கை மருத்துவத்தைக் கடைப்பிடிப்பதா வேண்டாமா? அது நமக்கு ஒத்து வருமா வராதா என்று ஒரு முடிவுக்கு வரலாம். இது ஓரு நோய்தான். ஒரு மருந்துதான். இதைப்போல் பல நோய்களுக்கும் பல மருந்துகளும் மருத்துவ முறைகளும் உள்ளன. ஒரே மருந்து பல நோய்களைக் குணப்படுத்த வல்லது. ஒரு நோய்க்கு பல மருந்துகளும் பயன் படும். அவையெல்லாம் மருந்துகளா உணவா என்பதை ஆய்வு செய்து பார;க்கும்போதுதான் இதுவரை எவ்வளவு நாம் இழந்திருக்கிறோம் என்பது புரிய வரும். அதனால் முதலில் இயற்கையைப் பற்றி சிறு வயதிலேயே மிகச் சரியாகப் புரிந்து கொண்டால் முன்னூறும் வாழ முடியும். அதற்கு மேலும் வாழமுடியும். அதற்குத் தயாராகினால் அனைத்தும் நமக்கு சாத்தியமே. உலகமே நம் கையில் (அறிவியல் வளர;ச்சியால்) என்பதுபோல் நம் வாழ்க்கை நம் கைகளுக்குள் வந்து விடும். வாழ நினைத்தால் வாழலாம்.
   

Wednesday, September 23, 2015கொத்தமங்கலத்தில் முளைப்பாரித் திருவிழா. பல்லாயிரக் கணக்கான பெண்களுக்குக் கொண்டாட்டம்... ஆண்களுக்கும்தான்
                    கண்ணன்கணினி.
    முளைப்பாரித் திருவிழா என்றால் கொத்தமங்கலம்தான். கொத்தமங்கலம் என்றால் முளைப்பாரித் திருவிழாதான்.     தமிழகம் எங்கும் பல்வேறு கிராமங்களில் இத்திருவிழா நடத்தப் படுவது வழக்கம். ஆனாலும் இத்திருவிழாவிற்குப் பெயர; பெற்ற கிராமமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலம் திகழ்கிறது.
    கொத்தமங்கலம் பெரியகுளம்(ஏரி) பகுதியில் உள்வாய்ப் பகுதியில் பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் புதன்கிழமை முளைப்பாரித் திருவிழாவும்  அடுத்த புதன்கிழமை மது எடுப்புத் திருவிழாவும் நடைபெறும்.
    இது குறித்து இந்த ஊரைச் சேர;ந்த மணிவேல்சேர;வை என்பவரது மனைவி வௌ;ளையம்மாள் கூறுகையில் தலைமுறை தலைமுறையாக எங்கள் பகுதியில் இத்திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழா கிராமத்தின் முக்கிய நபர;களும் ஊர;ப்பிரமுகர;களும் இருந்து கலந்து பேசி முடிவெடுத்து ஆடி மாதத்தில் ஒரு புதன்கிழமையைத் தேர;வு செய்து விதை போட தண்டோரா மூலம் அறிவிக்கப்படும்(இப்போது மைக்செட்).
    அதன்படி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் முன்பெல்லாம் மண்சட்டிகள் என்றாலும் நாகரீகம் வளர;ந்தபிறகு செப்பு மற்றும் சில்வர; பாத்திரங்களில் மண்ணும் எருவும் கலந்து வைத்து நவதானியங்களும் தூவப்பட்டு தண்ணீர; ஊற்றி இருட்டறையில் வைக்கப்படும். அதற்கு தினமும் பு+ஜைமுறைகளும் செய்விக்கப் படும். மேலும் காலை மாலை என இருவேளையும் தண்ணீர; ஊற்றப்படும். இருட்டறையிலும் கூடை போட்டுக் கவிழ்த்து வைத்து காற்றோட்டம் இருக்குமாறும் சூரிய வெளிச்சம் படாதவாறும் பாதுகாப்போடு வளர;க்கப்படும்.
    அவ்வாறு விதைபோடுவதற்குக்கூட எங்கள் ஊரில் உள்ள தென்னம்பிள்ளைக்காரர;கள் வகையறாவிலிருந்து சங்கரன் குடியிருப்பைச் சேர;ந்த பு+சாரிகள் வீட்டுக்குச் சென்று கொடுத்து முதன்முதலில் போடுவார;கள். அதன்பிறகு ஊர;மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் போட்டு வளர;ப்பார;கள்.
    விதைகள் மூன்று நாட்களில் முளைத்து விட்டாலும் அடுத்த நான்கு நாட்களில் ஒன்று முதல் ஒன்றரை அடிவரை பயிர;கள் வளர;ந்துவிடும். பச்சயம் இல்லாமல் வெளிர; நிறத்தில் வளர;ந்திருக்கும். இது உண்மையில் ஆடி மாதத்தில் விதைகள் விதைப்பதற்கு ஏற்றவகையில் உள்ளனவா என்பதை சோதித்து அறிந்து கொள்வதற்காக விவசாயிகள் செய்யும் சோதனையாக இருந்தாலும் பிடாரி அம்மனிடம் மழைவேண்டி நடத்தும் விழாவாகவும் நடத்தப் படுகிறது. இரவு நேரங்களில் பெண்கள் சேர;ந்து ஆங்காங்கே கும்மியடிக்கும் நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும். இந்தக் கும்மியடித்தல் நிகழ்ச்சியில் வயது வித்தியாசம் இல்லாமல் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை கலந்து கொள்வார;கள். விதை தூவியது முதல் மது எடுப்புத் திருவிழா முடியும்வரை 15-நாட்களுக்கு கிராமம் களைகட்டியிருக்கும். பெரும்பாலும் அசைவத்தை அந்த நாட்களில் தவிர;த்து விடுவார;கள்.
    அவ்வாறு வீடுகளில் வைத்து வளர;க்கப் பட்டு அடுத்த புதன்கிழமை குடியிருப்புக் கோவில்களுக்கு அந்த முளைப்பாரிகளை எடுத்துக் கொண்டு வந்து வைத்து பு+ச்சுற்றி, அலங்காரம் செய்து வணங்கி கும்மியடித்து தலையில் சுமந்து வரிசையாகவும் கும்பலாகவும் வருவார;கள்.
    கொத்தமங்கலத்தில் நான்கு திசைகளிலும் இருக்கும் அனைத்துக் குடியிருப்புகளில் இருந்தும் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மண்ணடித்திடல் என்ற இடத்தில் ஒன்று சேர;ந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்று பிடாரி கோவிலை அடைவார;கள். அங்கு கோவிலை மூன்று முறை வலம் வந்து கோவில் முன்புறம் உள்ள குளத்தில் பயிர;களைக் கொட்டிவிட்டு பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வீடு வந்துவிடுவார;கள் என்கிறார;.
    அதேபோல் மறுவாரம் புதன்கிழமை பாளைஎடுப்புத் திருவிழா நடக்கிறது. அதாவது தென்னை மரத்திலிருந்து உடையாத பாளையை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து பாதியளவிற்கு பட்டையை உரித்து செப்புக்குடங்களில் செருகி அதற்கு முன்னதாகவே பிடாரியம்மனுக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையைக் குடத்துக்குள் போட்டு வைத்து விடுகிறார;கள். சிலர; நெல், சோளம் போன்ற தானியங்களையும் போட்டு வைக்கிறார;கள். அவ்வாறு போட்டு வைப்பதை பாளையெடுப்பு முடிந்தவுடன் அவற்றைக் கோயிலில் கொடுத்து விட்டு வருகிறார;கள். கொழுக்கட்டை பக்தர;களுக்கு பிரசாதமாகவும் தானியங்கள் அம்மனுக்கும் வழங்கப் பட்டு விடுகிறது. என்ற போதிலும் தென்னம்பாளையைச் செருகி வைத்துக் கொண்டு குடத்தை தலையில் சுமந்து ஆடும்போது குடம் கீழே விழுந்து விடாமல் சாய்ந்து விடாமல் இருக்க பேலன்சிற்காகப் போட்டு வைக்கப்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
    அவ்வாறு தென்னம்பாளைகளைச் சுமந்து கொண்டு கோவிலுக்குச் செல்வதற்கு அந்த ஊரில் இருக்கும் பெண்கள் மட்டுமல்ல அதே ஊரில் பிறந்து வெளியு+ர;களுக்குத் திருமணம் செய்து கொடுத்திருக்கும் பெண்களும் வந்து உரிமையோடு கலந்து கொள்கிறார;கள். அவர;களுக்காக அவர;கள் பிறந்த வீடுகளில் பாளைக்குடம் தயாரித்து வைத்து விடுகிறார;கள். அதே போல் வெளியு+ர;ப் பெண்களும் விரும்பினால் இந்த விழாவில் கலந்து கொள்ளலாம்.
    முளைப்பாரித் திருவிழாவிற்கு பயிர;ப்பாத்திரங்களைச் சுமந்து கொண்டு செல்லும் அதே வழித்தடத்தில்தான் கொண்டு செல்கிறார;கள் என்றாலும் இரு விழாக்களுக்கும் ஒரு சிறு வித்தியாசத்தைக் காண முடிகிறது. அதாவது முளைப்பாரி கொண்டு செல்லும்போது ரொம்பவும் ஆட்டம் ஆட மாட்டார;கள். ஆனால் பாளைக்குடம் சுமக்கத் துவங்கி விட்டாலோ ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். பாடுவது பிடாரியம்மன் மாரியம்மன் பாடல்கள் என்றாலும் ஒருவருக்கொருவர; இடித்துக் கொள்வதும் சேட்டைகள் செய்து கொள்வதும் அவர;கள் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தது, அவர;களின் மன எழுச்சிகளையும் ஆசைகளையும் மகிழ்ச்சியாக வெளிப்படுத்திக் கொள்வதும் கிராமத்துக் கேலிகளுக்கே உரித்தான கிராமத்து மகிழ்ச்சியான நல்ல கலாச்சாரத்துக்கே உரியனவாக இருக்கும். அவையெல்லாம் சாமி வந்து ஆடுவது போல் இருக்காது. உண்மையில் கிராமத்து மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியோடு திருவிழாக்கள் கொண்டாடுகிறார;கள் என்பதை மற்றவர;களுக்கு உணர;த்தும் விதமாகவும் அமையும்.
    பெண்கள் இவ்வாறு ஆடிப்பாடி மகிழ்ந்து வருகிறார;கள் என்றால் அவர;களைக் காண ஆண்கள் வராமலா இருப்பார;கள்? நிச்சயமாக இருப்பார;கள். அந்தந்த வயதுக்கே உரிய தன்மையோடு அவர;களும் திருவிழா மகிழ்ச்சியைக் கொண்டாடுவார;கள். இத்திருவிழாவில் ஆசாபாசங்கள் இருக்குமேயன்றி ஆபாசங்கள் இருக்காது. இருபாலரும் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார;கள். இந்தக் கலாச்சாரத்தை கொத்தமங்கலம் கிராமத்து பாளையெடுப்புத் திருவிழா மூலம் மற்றவர;கள் உணர;ந்து கொள்ளலாம்.
    முளைப்பாரி மற்றும் பாளையெடுப்பு ஆகிய இத்திருவிழாக்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆடிப்பாடி வருவதைக் காணும்போது ஆண்களுக்கு மட்டுமல்ல அதைக்காணும் பெண்களுக்கும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை நேரில் காண வேண்டும் என்றால் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் கொத்தமங்கலத்தில் நடக்கும் திருவிழாவின்போது வந்து பார;த்தால் தெரியும்.
சுமார; 25-ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இத்திருவிழாக்களின்போது பெண்களுக்கு முன் சிலம்பாட்டம் ஆடிச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இப்போது அந்தக் காட்சி மட்டும் மிஸ்ஸிங்.எங்கள் ஊர;ப் பொங்கல். வந்து பாருங்கள் தெரியும்  அன்புடன் அழைப்பது.... கண்ணன்கணினி
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ள சொpயலூh; கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வித்தியாசமான திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. சொpயலூh; கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதற்கு முன்பு இந்த திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும். பிறந்த சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் தாய் அல்லது சகோதாpகள் கலந்து கொள்வாh;கள். திருவிழாவில் பங்கேற்கும் பெண்கள் திருவிழா முடியும் வரை விரதம் இருந்து கலந்து கொள்ள வேண்டும்.
சொpயலூh; கிராமத்தில் பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் காலையில் வெற்றுப் பொங்கல் வைத்து 3 படையல் வைத்து ஒரு படையலை விரதம் இருப்பவா;கள் சாப்பிடவும் மற்ற இரு படையல்களை ஒரு ஓலை கூடையில் இரு பொpய சாணிப் பிள்ளையாh;களுடன் 91 சிறு சாணிப் பிள்ளையாh; செய்து அதில் கூளைப் பு+, ஆவாரம் பு+, அருகம்புல் ஆகியவற்றை அந்த கூடையில் வைத்து கிராமத்தின் மையப்பகுதிக்கு வந்து கிராமத்தின் அனைவரும் ஒன்று கூடி கும்மியடித்து அணிவகுத்து தீh;த்த ஊரணி வரை கொண்டு சென்றனா;. அங்கு கூடையில் உள்ள பொங்கலை மட்டும் தனியாக எடுத்தக் கொண்டு மற்ற பொருட்களை குழியில் புதைத்துவிட்டு சென்றனா;. இந்த திருவிழாவை கொப்பித் திருவிழா என்று இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனா;. இந்த திருவிழாவில் ஏராளமான பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனா;.
இதே போல் ஆலங்குடியை அடுத்த வடாடு பரமநகர; பகுதியிலும் கொப்பித் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழா பற்றி இந்த ஊரின் கூட்டுறவு சங்கத் தலைவர; சின்னு கூறுகையில் விவசாயிகள் கொண்டாடும் முதன்மைத் திருவிழா பொங்கல்தான். இந்தப் பொங்கலை பரமநகர;ப்பகுதியில் உள்ளவர;கள் மட்டும்தான் கொப்பியுடன் சேர;த்துக் கொண்டாடுவார;கள்.
தொடக்கக் கலாத்தில் 16-குடும்பங்கள் மட்டும் இருந்த இப்பகுதியில் இப்போது 83-தலைக் கட்டுகள் உள்ளன. அந்த 83-தலைக் கட்டுதாரர;களும் ஒன்று சேர;ந்து எங்களுக்குள் செலவுக்குத் தகுந்தமாதிரி வரி வசூலித்து விழா நடத்துவோம். அதன்படி வீட்டு வாசலில் 32-சாணப் பிள்ளையார;கள் பிடித்து வைத்து அதில் பொங்கலுக்குச் செய்யும் அனைத்து சடங்குகளும் செய்து முடிப்போம். அதற்கு முன்னதாகவே செப்புக் குடங்களில் தீர;த்தம் எடுத்து வைத்துக் கொண்டு உள்ளு}ரில் உள்ள பிள்ளையார; கோவிலுக்கு மேளதாள ஊர;வலத்துடன் சென்று சாமிக்கு தீர;த்தம் செய்து விட்டு வருவோம். அதன்பிறகுதான் கொப்பியும் கும்மியும் வளந்தானையும் அடித்து மகிழ்வோம் என்றார;.
அது பற்றி அந்தப் பகுதியைச் சேர;ந்த ஓய்வு பெற்ற சர;வேயர; துரைராஜ் கூறுகையில் கொப்பி எடுத்தல் என்பது வீட்டு வாசலில் வைத்திருக்கும் பிள்ளையார;களைச் சேகரிப்பதாகும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 32-பிள்ளையார;கள் சேரும். அதனை ஓலைப் பெட்டிகளில் சேகரிப்போம். அதிலும் மேளதாளம் வைத்துக் கொண்டு இளைஞர;கள் கோலாட்டம் அடித்துக் கொண்டு வருவார;கள். கோலாட்டத்தை வளந்தாணை என்றும் சொல்வார;கள். இந்தக் கோலாட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினரும் கலந்து கொள்வோம்.
கோலாட்டப் பாடல்களில் விவசாயிகளை மேம்படுத்தும் பாடல்களும் ஊரைப் பெருமைப் படுத்தும் பாடல்களும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் பாடல்களும் பாடப்படும். முன்பெல்லாம் பாடல் பாடுவதற்கென்று பெரிய ஆட்கள் இருப்பார;கள். இப்போது சிடிக்களை ஓடவிட்டு அந்தப் பாடல்களின் தன்மைக்கேற்றவாறு கோலட்டத்தின் தாள வரிசைகளும் மாறி ஆடுவார;கள். இந்தக் கோலாட்டத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கேலாட்டக் குச்சியைக் கையிலெடுப்பவர;கள் அசைவம் சாப்பிட அனுமதி உண்டு. ஆனால் அன்றைய சாராயம் முதல் இன்றைய போதைப்பாக்குவரை எதையும் அனுமதிப்பதில்லை. அதனால் ரிகல்சல் நடக்கும் காலம் தொடங்கி பொங்கல் முடியும்வரை இளைஞர;கள் போதைப் பொருள்களைத் தொடுவதில்லை. சேகரித்த கொப்பிப் பொருட்களை சிவந்தியம்மன் கோவிலில் கொண்டு சென்று போட்டு விட்டு வருவோம். இந்த வழக்கம் வடகாட்டில் வேறு குடியிருப்புகளில் இல்லை. பரமநகர;ப்பகுதியில் மட்டும்தான் உள்ளது என்றார;.
கீரமங்கலம் பகுதியில் தேங்காய்காளால் மோதிக்கொள்ளும் போட்டி நடத்தப்பட்டது.
    தை திருநாளை தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையாக 3 நாட்கள் கொண்டாடி மகிழ்கின்றனா;. இந்த நாட்களில் கிராமங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்கின்றனா;. இந்த வகையில் தமிழகம் எங்கும் மாடுகளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது போல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது வித்தியாசமான போட்டிகளை நடத்தி வருகின்றனா;.
    இந்த வகையில் ஆலங்குடியை அடுத்துள்ள சொpயலூh;, வேம்பங்குடி, மேற்பனைக்காடு, மற்றும் தஞ்சாவு+h; மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவு+ரணி, தென்னங்குடி, வலப்பிரமன்காடு, செருவாவிடுதி, களத்தூh; மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதாவது எதிh; எதிh; திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும். இந்த மோதலில் உடையும் தேங்கயை மோதி உடைத்தவா; எடுத்துக் கொள்வாh;. இந்தப் மோதலுக்கான ஒரு போh; தேங்காய் ரூ.300 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனா;. ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவா;களும் உள்ளனா;. இந்த விழாவைக்காண ஏராளமான பொதுமக்கள் வருவதும் வழக்கமாக உள்ளது.
புதுக்கோட்டையில் பு+ந்தோட்டமாக மாறிய கிராமம்.   
                                           
    கோடை வெய்யில் சுட்டெரிக்கிறது. வீட்டைவிட்டோ நிழலை விட்டோ வெளியில் வரமுடியவில்லை. ஏசி இல்லாத காரில்கூடப் பயணம் செய்ய முடியவில்லை. இந்த வெய்யில் காலத்தில் பலதரப்பில் உள்ளவர;களும் சிறிது ஓய்வு வேண்டும் என்று நினைப்பவர;கள் குற்றாலமோ ஊட்டியோ கொடைக்கானலோ தேர;வு செய்து அங்கு செல்ல நினைப்பார;கள். பெரும் பணக்காரர;கள் ஊட்டியிலும் கொடைக்கானலிலும் பண்ணைகளோ பண்ணை வீடுகளோ தோட்டம் துறவுகளோ வைத்திருப்பவர;களும் உண்டு. ஆனால் அதே கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் எல்லாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் இந்தக் கிராமத்திடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஆம். இப்போதுள்ள வறட்சியிலும் கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கும் பு+ச்செடிகளையும் அழகுச் செடிகளையும் மரக்கன்றுகளையும் வளர;த்து வைத்து கிராமத்தை அழகாக்கி வைத்திருப்பதுடன் அதன்மூலம் வருமானத்தைப் பெருக்கி தங்கள் வாழ்வாதாரத்தையும் வளமானதாக மாற்றியிருக்கிறார;கள் கிராமத்து மக்கள் என்றால் அனைவரையும் வியப்படைய வைக்கும்.
    புதுக்கோட்டையிலிருந்து 35-கிலோ மீட்டர; தூரத்தில் உள்ள கிராமம் கல்லுக்குடியிருப்பு. இந்தக் கிராமத்தில் மண்வளம் இல்லை. நீர;வளம் இல்லை. வெறும் கிராவல் மண் நிறைந்த பு+மி. மண்வெட்டி கொண்டு மண் வெட்ட முடியாது. கடப்பாறை கொண்டு குழிதோண்ட வேண்டும் என்றாலும் நாள் கணக்கில் ஆகும் அந்தப் பு+மியில் உள்ள மக்கள் இப்போது அழகிய கிராமமாக மாற்றிக் காட்டியிருக்கிறார;கள்.
    எப்படி முடிந்தது அவர;களால்? இந்த ஊரில் முதன் முதலாக கன்று வளர;த்த செல்லையா என்பவர; கூறுகையில் சுமார; 20 ஆண்டுகளுக்கு முன் அரிமளத்தில் ஒருவர; கன்றுகள் போட்டு வைத்திருந்தார;. அவரிடம் கன்றுகள் மொத்தமாக எடுத்து வந்து சைக்கிளில் கட்டிக் கொண்டு ஊர;ஊராகப் போய் விற்றேன். அதிலிருந்து நாமும் இதுபோல் உற்பத்தி செய்யலாம் என்று நினைத்து இங்கேயே கன்றுகள் உற்பத்தி செய்து விற்கத் துவங்கினேன். என்னுடன் கன்றுகள் விற்பனை செய்தவர;களும் கன்றுகள் உற்பத்தி செய்தது இன்றளவில் இந்தக் கிராமத்துக்குள் 94- பண்ணைகள் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றார;.
    இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர; சிதம்பரம் கூறுகையில் சுற்றி உள்ள ஊர;கள் எல்லாம் ஓரளவிற்கு தண்ணீர; வசதி இருந்தாலும் கல்லுக்குடியிருப்பு மட்டும் குடிதண்ணீர;கூட கிடைக்காத கிராமம். இங்குள்ள மக்கள் ஒரு காலத்தில் சாராயம் காய்ச்சி  விற்று வயிற்றுப் பிழைப்பு நடத்தும் அளவிற்கு மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருந்தோம். அதே போல் கூடைபின்னி விற்பது, அருகில் உள்ள வனத்துறைப் பகுதிக்கும் சுற்று வட்டாரக் கிராமங்களுக்கும் கூலிவேலைக்குச் செல்வது என்று மிகவும் தாழ்ந்த நிலையில்தான் இருந்தோம். வீட்டுக்குத்தேவை உப்பு, மண்ணெண்ணை, தீப்பெட்டிதான் அவசியம் என்று நினைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினோம். ஆனால் அதே உழைப்பை பு+க்கன்றுகள், மரக்கன்றுகள் வளர;ப்பதில் செலவிட்டதில் இன்று அனைவரும் நல்ல நிலைக்கு உயர;ந்திருக்கிறோம். படிக்க வாய்ப்பில்லாமல் இருந்த நாங்கள் எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கிறோம். இப்போது சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து பலரும் எங்கள் கல்லுக்குடியிருப்புக்கு வேலைக்கு வருகிறார;கள். பலருக்கும் வேலை கொடுக்கிறோம் என்பதில் கிராமத்துக்கே பெருமை.
    எங்களுக்கு முன் அரிமளத்தில் வைத்திருந்த கன்றுகளைப் பார;த்தாலும் அருகில் வனத்துறையில் தைலமரக்கன்றுகள் வளர;க்கும் முறையைப் பார;த்துதான் நாங்களும் கன்றுகள் உற்பத்தியை முறையாலகக் கற்றுக் கொண்டோம். முதலில் விதைக்கன்றுகள், பின்னர; ஒட்டுக்கன்றுகள், கலப்பினக் கன்றுகள், பு+ங்கன்றுகள், குரோட்டன்ஸ் வகைகள், மலைப்பகுதியில் மட்டுமே வளரும் என்று சொல்லப்படும் கன்று வகைகள் என்று அனைத்தும் உற்பத்தி செய்தோம். தொடக்கத்தில் சைக்கிளில் கட்டிக் கொன்று ஊர; ஊராகப் போய் விற்பனை செய்தோம். அதில் அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டும் வருமானம் கிடைத்தது.
    இங்கு கன்றுகள் உற்பத்தி செய்து மலிவான விலைக்கு வழங்குகிறோம் என்பதை அறிந்து மாவட்டம் முழுவதும் இருந்து நிறையப் பேர; வந்தார;கள். பின்னர; மற்ற மாவட்டங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கான கன்றுகளை வாங்கிச் சென்றதால் எங்களுக்கு ஓரளவிற்கு வருமானம் வரத்துவங்கியது. இப்போது கேரளா, கர;நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து வாங்கிச் செல்கிறார;கள். அதிகளவில் வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்று அதிக விலைக்கு விற்கிறார;கள். நாங்களும் அதிக லாபம் எதிர;பார;க்காமல் விற்கிறோம். நல்ல மழை பெய்யும் வருடம் லாபம் கிடைக்கும். இந்த ஆண்டு இருக்கும் கன்றுகளைக் காப்பாற்றி வைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. எப்படியும் இந்த ஆண்டு பருவமழை பெய்தால் இருக்கும் கன்றுகளை விற்று விட்டு பின்னர; உற்பத்தி செய்யலாம் என்ற நிலையில் இருக்கிறோம் என்றார;.
    மேலும் கன்று வளர;ப்பது குறித்து இதே ஊரைச் சேர;ந்த இன்னொரு செல்லையா என்பவர; கூறுகையில் ஒரு கூடை மண்கூடக் கிடைக்காத எங்கள் ஊரில் கன்றுகள் வளர;ப்பது மிகவும் சவாலான விஷயம். வெளியு+ர;களுக்குச் சென்று லாரியிலோ டிராக்டர;களிலோ மண் வாங்கி வந்து கன்றுகள் உற்பத்தி செய்கிறோம். அவ்வாறு விலைக்கு மண் வாங்கி டிராக்டர;களில் ஏற்றி வரும்போது வருவாய்த்துறையினரின் கெடுபிடிகளும் அதிகம். புதுக்கோட்டைக்கு வரும் மாவட்ட ஆட்சியர;கள் எங்களது இந்தக் கல்லுக்குடியிருப்பு கிராமத்திற்கு தவறாமல் வந்து பார;த்து விட்டு எங்களுக்கென்று ஏதாவது செய்வதாகச் சொல்கிறார;கள்.
    அதே போல் இந்த ஊர; கிராவல் பு+மியாக இருந்தபோதிலும் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரில்தான் கன்றுகள் வளர;க்கிறோம். அதற்கு மின் இணைப்புப் பெற்றிருக்கிறோம். எங்களுக்கு விவசாயத்திற்கு உள்ள மின்சாரம் தரமுடியாது என்று சொல்லி விட்டது மின்வாரியம். அதனால் தொழில்முறை மின்சாரம்தான். அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் மின்கட்டணத்தில் பாதியைக் குறைத்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும். கன்று விற்பதில் கிடைக்கும் லாபத்தில் பாதி மின் கட்டணத்துக்கே போய் விடுகிறது. மீதியில்தான் ஜீவனம் நடத்துகிறோம் என்றார;.
    இந்த ஊரில் முதன் முதலாக மகளிர; சுயஉதவிக் குழுக்களைத் துவக்கி அவர;களை கன்றுகள் வளர;ப்பதற்காகத் தயார; படுத்திய காமாட்சி கூறுகையில் 2001-வரை எழுதப் படிக்கவும் தெரியாமல் கூலிவேலைக்குச் சென்று கொண்டிருந்தோம்.
    கன்றுகள் உற்பத்தி செய்யத் துவங்கியவுடன் சென்னையில் வேளாண்துறையில் இருந்து எங்களது பு+ங்கன்றுகளையும் மரக்கன்றுகளையும் கொண்டுபோய்க் கண்காட்சிக்கு வைத்திருந்தோம். அப்போது முதல் பரிசு வாங்கி வந்தது எங்களுக்கு பெரும் ஊக்கமாக இருந்தது. அதனால் மகளிர; சேர;ந்து கன்றுகள் வளர;த்து பொருளாதாரம் ஈட்டினோம்.
    கேள்விப் பட்ட கலெக்டர; சுகந்தி வந்து பார;த்து எங்களுக்காக இரண்டு போர; போட்டுக் கொடுத்தார;. அது இரண்டும் பழுதாகி விட்டது. இப்போது ஆளாளுக்கு போர; போட்டு எல்லோரும் கன்றுகள் வளர;த்து சம்பாதிக்கிறோம். ஒற்றுமையாய் இருந்த சுய உதவிக்குழுவைக் கலைத்து விட்டோம். ஆனாலும் தனிப்பட்ட முறையில் அனைவரும் வளர;ச்சி பெற்றிருக்கிறோம். கன்றுப் பண்ணைகள் மட்டுமல்லாது அவற்றை விற்றுக் கொடுப்பதற்கு பத்துக்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் இருக்கிறார;கள். வீடு இருக்கும் இடமான ஐந்து சென்ட் பத்து சென்ட் இடங்களையே பு+ந்தோட்டமாக மாற்றியதில் ஊர;முழுவதும் அழகாக மாறி விட்டது. நிலம் அதிகமாக வைத்திருப்பவர;கள் பெரும் பண்ணைகளும் வைத்திருக்கிறார;கள் என்றார;.
    கிராமப் பகுதிகளில் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று.
கடலுக்குள் நாங்கள் 12-நாட்டிக்கல் மைல் மட்டுமே போய் பாதுகாக்க முடியும் என்று கடலோரப் பாதுகாப்புக் காவல்துறைத் தலைவர; அளித்த பேட்டி மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.
    கடலோரப் பாதுகாப்புக் காவல்துறைத் தலைவர; 13.2.2015-அன்று பகலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர;களின் குறைகளைக் கேட்டறிய வந்திருந்தார;. அப்போது அவரிடம் அங்கிருந்த இலங்கைத் தமிழர;கள் குடிநீர; வசதிபோதாது, மின்சாரம் சில வீடுகளில் இல்லை, சில வீடுகளில் மேற்கூரைகள் மாற்ற வேண்டும் என்ற சிறுசிறு குறைகளைத் தெரிவித்தார;கள். (அதுதானே அவர;களுக்குப் பெரிய குறையே)
    அதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர; கணேஷ் உடனடியாக ஒன்றிய ஆணையரை அழைத்து 24-மணி நேரமும் இலங்கை அகதிகளுக்கு தடையில்லா மின்சாரமும் குடிநீரும் வழங்க அரசு அறிவித்துள்ள அறிவிப்பைச் சுட்டிக் காண்பித்து தோப்புக்கொல்லை முகாமில் உள்ளவர;களுக்கு உடனடியாகச் செய்துதர உத்தரவிட்டார;. அதே போல் மற்ற முகாம்களிலும் உள்ளவர;களுக்குச் செய்ய வேண்டி கோட்டாட்சியருக்கும் உத்தரவிட்டார;.
    அடுத்து பேசவந்த கடலோரப் பாதுகாப்புக் காவல்துறைத் தலைவர; சொக்கலிங்கம் இலங்கையிலிருந்து இந்தியாவில் வந்து தங்கியிருக்கும் மக்களுக்கு 1991-ஆம் ஆண்டு இருந்த நிலையை மாற்றி அனைத்து வசதிகளையும் செய்து தந்திருக்கிறது. அதனால் யாரும் இங்கிருந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தப்பிப் போய்விடலாம் என்று நினைக்க வேண்டாம். யாரும் தங்கம் கடத்துகிறார;களா என்பதைக் கண்காணித்துக் கொள்ளுங்கள்.
    கடத்தலில் ஈடுபட்ட பிடிபடுபவர;கள் பெரும்பாலும் இலங்கைத் தமிழர;கள் வாழும் பகுதிகளில் பதிவில்லாமல் வாழ்பவர;களாக இருக்கிறார;கள். பாகிஸ்தான் உளவாளியாகச் செயல் பட்டு வந்த அருட்செல்வராஜ் என்பவன் ஆறுமாதத்திற்கு முன் பிடிபட்டான். அவனும் இப்படித்தான் இருந்து பிடிபட்டிருக்கிறான். அதனால் புதியவர;களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்புவது என்பது இங்கிருக்கும் காவல்துறையோ வருவாய்த்துறையோ எடுக்கும் நடவடிக்கை இல்லை. அது இந்திய அரசு எடுக்கும் முடிவைச் சார;ந்தது என்றார;.
    நிருபர;களுக்குப் பேட்டியளித்தபோது இதுவரை ஆறு மாவட்டங்களில் 22-முகாம்களில் இதுபோல் சோதனை நடத்தியிருக்கிறேன். இங்கேயே இருப்பவர;கள் நன்றாகத்தான் இருக்கிறார;கள். வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கிளம்புபவர;கள்தான் மிகவும் சிரமப்படுகிறார;கள். இங்கு வந்து படித்தவர;கள் டாக்டர;களாகவும் பொறியாளர;களாகவும் இருக்கிறார;கள். இங்கிருப்பவர;களுக்கு உயர;படிப்பு ஒரு தடையில்லை என்றார;.
    வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்குள் தங்கம் கடத்தி வருவது இப்போது அதகரித்துள்ளதே என்று கேட்டபோது நாங்களும்தான் ராமநாதபுரத்தில் 35-கிலோ தங்கம் பறிமுதல் செய்துள்ளோம்.
    கடல்வழியாகக் கடத்தப் பட்டு வரும் தங்கம் கடலோரப் பாதுகாப்புப் படைக்குத் தெரியவில்லையே என்றதற்கு அதுதான் இங்கே வைத்துப் பிடித்திருக்கிறோமே என்று சொல்லி வேறு சப்ஜெக்டுக்கு மாறினார;. தமிழகத்தில் கடலோர மீனவர; கிராமங்களாக 596-கிராமங்கள் இருக்கின்றன. கடலோரத்தைப் பாதுகாக்க 1500-பேர; அந்தப் படையில் நியமிக்கப் பட்டிருக்கிறார;கள். இந்தப் பகுதிகளில் 30-காவல் நிலையங்கள் இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 32-மீனவர; கிராமங்கள் இருக்கின்றன.
    கடலோரத்தைப் பாதுகாப்பதில் மீனவர;களுக்கு விழிப்புணர;வு ஏற்படுத்துவற்காகவும் அவர;களின் குறைகளைக் கேட்டறிவதற்காகவும்தான் இந்த குறைகேட்பு மற்றும் விழிப்புணர;வுக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த விழிப்புணர;வு இலங்கை அகதிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதால்தான் புதுக்கோட்டை வாழ் இலங்கை அகதிகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
    இவர;களுக்குள் தங்கி இருந்துதான் கடத்தல்பேர;வழிகளும் ஆயுதம், வெடிமருந்து போன்றவை கடத்துபவர;களும் செல்கிறார;கள். அதனால் இவர;களுக்கு விழிப்புணர;வு ஏற்படுத்தி விட்டால் அவர;கள் நமக்குத் தகவல் தருவார;கள். குற்றங்கள் குறையும். மும்பையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தின்போது மீனவர;களுடன் இருந்துதான் பாகிஸ்தான் உளவாளி வந்திருக்கிறான் என்கிறபோது இங்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது என்றார;.
    கடல்வழியாகக் கடத்தி வரப்படும்போது குற்றவாளிகளை ஏன்கடலோரக் காவல்படையினர; பிடிப்பதில்லை என்று கேட்டதற்கு கடலுக்குள் நாங்கள் 12-நாட்டிக்கல் மைல் மட்டுமே போய் பாதுகாக்க முடியும். அதற்கு அப்பால் போகமுடியாது. துறையில் 1500-பேர; மட்டுமே வேலை செய்வதால் ஆட் பற்றாக்குறையும் உள்ளது என்று சொல்லி முடித்துக் கொண்டார;.
    இரண்டு நாட்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றான மீமிசலில் இதேபோல் கடலோரப் பாதுகாப்புக் காவல்துறைத் தலைவர; சொக்கலிங்கம் பேசி முடித்தபிறகு குற்றவாளிகளைக் கண்டறிந்து சொன்னால் எங்களுக்குத்தான் சிக்கல். எங்களுக்கு என்ன பாதுகாப்புத் தருவீர;கள் என்று அங்கிருந்த இளைஞரான முத்துராக்கு என்ற மீனவர; கேட்டிருக்கிறார;.
    அந்த இளைஞரை தொலைபேசியில் தொடர;பு கொண்டு கேட்டபோது நான் காவல்துறைத் தலைவரிடம் கேட்டது உண்மைதான். கடலில் ரெட்டைமடிவலை வீசி அனைத்தையும் சுருட்டிவரும்போது சங்கு, பாசி, நத்தை, குப்பை கூளம் எல்லாவற்றையும்தான் அரித்தெடுத்து வருகிறது. ஆனால் போன மாதம் முத்துக்குடா பகுதியைச் சேர;ந்த மல்லிகைசேகர; என்பவர; ஐந்து விரல் சங்கு பிடித்து வைத்திருக்கிறார; என்று சொல்லி கடலோரக் காவல் படையினர; கைது செய்து அறந்தாங்கி சிறைக்கு அனுப்பி விட்டார;கள். 15-நாள் சிறைவாசத்திற்குப் பிறகு இதுவரை கண்டிசன் பெயிலில் கையெழுத்து போட்டு வருகிறார;.
    இது சங்கு போன்ற பொருட்களை கடலில் இருந்து எடுத்துவரக் கூடாது என்றும் அதற்கு வனத்துறையினர; ஏதாவது குறிப்பு எழுதினால் சிறையில் தள்ளப்படுவோம் என்பதும் அதற்கு அப்புறம்தான் தெரியும். கன்னியாகுமரியில் மலைபோல் குவித்து வைத்து வியாபாரம் செய்கிறார;கள். ஆனால் இங்கு கைது செய்கிறார;களே என்று ஆவேசப் பட்டு மல்லிகை சேகரை சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு வர விவரம் சேகரித்தபோதுதான் சங்கு மட்டுமல்ல 52-வகையான பொருட்களை எடுத்து வந்தால் சிறை உறுதி என்று தெரிந்தது.
    ஆனால் அந்த 52-வகையான பொருட்கள் என்னென்ன என்பது கடலோரக் காவல் படையினருக்கோ வனத்துறையினருக்கோ வழக்கு பதிவு செய்த குற்றவியல் போலீசாருக்கோகூடத் தெரியவில்லை. அப்புறம் படிக்காத எங்களைப் போன்ற மீனவர;களுக்கு என்ன தெரியும்? அந்தப் பட்டியலைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தபோது மல்லிகைசேகர; வைத்திருந்தது ஐந்து விரல் சங்கு என்பதும் அதை எடுத்தது குற்றமல்ல என்றும் தெரிய வந்தபிறகுதான் பெயில் கிடைத்தது. எட்டு விரல் சங்கு வைத்திருந்தாலோ விற்றாலோ குற்றம் என்கிறது சட்டம்.
    இதைப்போய் ஐந்து விரலா எட்டு விரலா என்று ஆராய்ச்சி செய்யக் காத்திருக்கும் கடலோரக் காவல்படையினர; தமிழகக் கடற்கரை ஓரங்களிலே இருப்பவர;களைக் கூட தூக்கிச் செல்லும் இலங்கைக் கடற்படையினரை விரட்டிப் பிடித்ததுண்டா? அதைக் கேட்டதற்காகத்தான் இப்போது நடந்தது எதுவானாலும் பேசித் தீர;த்துக் கொள்வோம். இனிமேல் யாரும் வந்தால் தொலைபேசியில் சொல்லுங்கள் என்று சொல்லி எங்களைச் சமாதானம் செய்து கொண்டிருக்கிறார; ஐஜி என்றார;.