Wednesday, June 17, 2020
புதுக்கோட்டையிலும் ஆணவக்கொலையா?
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தை அடுத்துள்ள இடையன்வயல் கிராமத்தைச் சேர;ந்த நாகேஸ்வரன் மகள் சாவித்திரி. மூன்றாம் ஆண்டு அறிவியல் பட்டதாரி. அதே பகுதியில் தோப்புக்கொல்லையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விவேக். இருவருக்கும் 20-வயது என்ற போதிலும் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர;ந்தவர;கள். கடந்த ஏழாண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகச் சொல்லும் விவேக் பெயிண்டர; தொழில் செய்து வருகிறார;. இருவரின் காதல் குறித்து சாவித்திரியின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தவுடன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார;கள்.
இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி சாவித்திரியை ஆணவக்கொலை செய்து விட்டதாகக் கிடைத்த தகவலின்பேரில் தனது உயிருக்கும் பாதுகாப்பில்ல்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர;, காவல் கண்காணிப்பாளர; அலுவலகம் என்று சுற்றிச்சுற்றி புகார;களைக் கொடுத்து விட்டு ஊர; ஊராகச் சென்று தலைமறைவாக இருக்கும் விவேக்கைச் சந்தித்தோம். அவருடன் அவரது தாயும் இருந்தார;.
உயிர;ப் பயத்துடன் இருக்கும் அவரைச் சமாதானப் படுத்தி தைரியம் கொடுத்து பேச வைத்தபோது அவர; நானும் சாவித்திரியும் உயிருக்குயிராகக் காதலித்து வந்தோம். திருவரங்குளம் பள்ளியில் ஒன்றாகப் படித்ததால் எங்களுக்குள் சாதி குறித்த எண்ணம் வரவில்லை. ஒருவரை ஒருவர; விரும்பினோம். ஏனக்கு மூன்று அக்காள்கள். இருவருக்கு திருமணம் ஆகி விட்டது. எனக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் கற்று வைத்திருந்த பெயிண்டர; தொழில் கைகொடுத்ததால் பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டு விட்டேன். சாவித்திரி கல்லூரிக்குச் சென்று வந்தாள்.
இவ்வளவு காலமாகத் தெரியாமல் இருந்த காதல் ஒரு வருடத்திற்கு முன்பு அவளது வீட்டுக்குத் தெரிய வந்தது. அதனால் நான் வேறு சாதி என்று கருதி அவளது உறவுக்காரர; ஒருவருக்கு நிச்சயம் செய்திருக்கிறார;கள். அதானால் அந்தப் பையனின் போன் நம்பரை வாங்கிய சாவித்திரி நாங்கள் காதலித்த விசயத்தைச் சொல்லியிருக்கிறாள். அந்தப் பையன் சாவித்திரியின் வீட்டில் சொல்லி விட்டான்.
அப்பொழுதே முடிவு செய்து அவளை அடித்து தூக்கில் போட்டு இருக்கிறார;கள். இரண்டு முறை அதுபோல் நடந்திருக்கிறது. இரண்டிலும் உயிர; தப்பியிருக்கிறாள். இந்த முறை எப்படியும் யாருக்கும் தெரியாமல் கொலை செய்யப் போகிறார;கள். அடித்த அடியில் உயிர; தப்பி வந்திருக்கிறேன். என்னை வந்து கூட்டிக் கொண்டு போ என்று தொலைபேசியில் சொன்னாள். இது நடந்தது 7.6.2020-அன்று இரவு. நாங்கள் வழக்கமாய்ச் சந்திக்கும் அழகம்பாள்புரம் தைலமரக் காட்டுக்குச் சென்ற போது அங்கு பெற்றோர; அடித்த காயத்துடன் நின்றிருந்தாள். நான் அழைத்துக் கொண்டு புதுகை அரசு மருத்துவக் கல்லூரியில் கொண்டு போய் சிகிச்சை செய்து கொண்டு ஒருநாள் முழுவதும் அங்கு இருந்து விட்டு அடுத்த நாள் இருவரும் கோவை சென்று விடலாம் என்று கருதி திருச்சிக்குச் சென்றோம்.
இடையில் பஸ் இல்லாவிட்டால் மாட்டிக் கொள்வோம் என்று கருதி என்னுடைய நண்பர;கள் சிலருக்கு போன் செய்தவுடன் அவர;கள் காருடன் அங்கு வந்தார;கள். காரில் கோவைக்குச் சென்று கொண்டிருந்தபோது குளித்தலையில் வாகன சோதனை போலீசாரிடம் சிக்கிக் கொண்டோம்.
அவர;கள் எங்கள் இருவரின் குடும்பங்களுக்கும் தகவல் சொன்னதன் பேரில் சாவித்திரியின் வீட்டிலிருந்து ஆறுமுகம், சிதம்பரம் மற்றும் பெண்ணின் தாயார் சாந்தி, கவுன்சிலர் ராஜேந்திரன், எனது பெற்றோரும் வந்தார;கள். இருவருடைய வயதையும் விசாரித்துப் பார;த்த போலீசார; எனக்கு 21-வயது நிறைவடைய இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறது என்று சொல்லி அதன் பிறகு சாவித்திரியை எனக்குத் திருமணம் செய்து தருவதாகச் சொல்லி இருவரையும் பிரித்தனர;. அப்போது கூட சாவித்திரி தன் உடலில் உள்ள காயங்களைக் காண்பித்து என்னை பெற்றோரிடம் அனுப்பாதீர;கள். அவர;கள் என்னை போட்டுத்தள்ளி விடுவார;கள். ஏற்கனவே இரண்டு முறை அவர;களிடம் தப்பித்துதான் காதலனுடன் சென்றேன். இனியும் விட்டு வைக்க மாட்டார;கள் என்று கதறினாள். போலீசார;தான் எங்களைச் சமாதானப் படுத்தி பிரித்து அனுப்பினார;கள். இப்போது என்னிடமிருந்து நிரந்தரமாகப் பிரிந்து போய் விட்டாள் என்றார;.
இச்சம்பவம் குறித்து இந்திய ஜனநாயக மாதர; சங்க மாவட்டச் செயலாளர; சலோமி கூறுகையில் அப்போதே விவேக் எங்களை அணுகி இருந்தால் உரிய நடவடிக்கை எடுத்து இருவரையும் சேர;த்து வைத்திருப்போம். அதற்குப் பிறகும் 11-6-2020 அன்று காலை 9-மணிக்குமேல் பட்டப் பகலில் இந்தப் பையனை அவன் வீட்டுக்கே வந்து காரில் கடத்திச் சென்று அடித்து துவைத்துப் போட்டு விட்டுச் சென்று விட்டார;கள். அப்போதும் யாரிடமும் சொல்ல வில்லை. அன்றிரவே சாவித்திரியைக் கொலை செய்து எரித்திருக்கிறார;கள். அடுத்தநாள் இந்தத் தகவல் ரகசியமாகக் கசியத் தொடங்கியபிறகுதான் விவேக் எங்களிடம் வந்து சொன்னபோது புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆணவக்கொலையா என்று அதிர;ந்து போனோம்.
என்ன நடந்தது என்று நாங்கள் சிபிஎம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருந்தபோதே விவேக்கைக் கடத்திச் செல்ல சாவித்திரியின் உறவினர;கள் கார;களில் வந்து அலுவலகத்தைச் சூழந்து கொண்டனர;. இந்தத் தகவல் எங்கள் வாலிபர; சங்கத் தோழர;களுக்குத் தெரிய வந்தவுடன் உடனடியாக போலீசுக்குத் தகவல் கொடுத்து பெரிய அசம்பாவிதம் நடப்பதிலிருந்து காப்பாற்றினோம். அதன் பிறகு எஸ்பி, கலெக்டர; என்று புகார; கொடுத்திருக்கிறோம்.
இப்போது விஏஓ இளையராசா என்பவர; மூலம் சாவித்திரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனை யாருக்கும் தெரியாமல் எரித்ததற்கும் புகார; கொடுக்கச் செய்து சாவித்திரியின் தாய் சாந்தி, பெரியம்மா விஜயா, அவளது உறவினர;கள் ஐந்து பேர; என எழுபேர; மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை அவர;களை உள்ளே தள்ளியிருக்கிறது. கடத்திச் சென்று தாக்கிய புகாரில் நால்வருக்குப் பதில் இருவர; மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. உறவினர;கள் பலர; உள்ளே சென்றிருக்கும்போதுகூட சாவித்திரியின் இனத்தைச் சேர;ந்த மற்றவர;கள் இதை பெரிய கவுரப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு விவேக்கைக் கொலை செய்து விடத் துடித்துக் கொண்டிருக்கிறார;கள் என்றார;.
வாலிபர; சங்கத்தின் மாவட்டச் செயலாளர; ஸ்ரீதர; கூறுகையில் ஒரு காலக்கட்டத்தில் பிராமனர;, பிராமனரல்லாதோர; என்ற வகையில்தான் சாதிப் பிரச்சனை இருந்தது. அது மாறிவரும் சூழலில் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கும் மற்றவர;களுக்கும் யார; ஆதிக்க சக்தி என்ற வகையில்தான் தமிழகம் முழுவதுமே சாதீயப் பாகுபாடுகளும் அரசியல் பிரச்சினைகளும் காதல் திருமணப் பிரச்சினைகளும் பார;க்கப் பட்டன. அப்போதெல்லாம் ஆதிக்கத்தை உடைப்பதற்கு பிற்படுத்தப் பட்டவர;கள், மிகவும் பிற்படுத்தப் பட்டவர;கள், தாழ்த்தப் பட்டவர;கள் என அனைவரும் ஒரு முகமாக நின்றுதான் சுமூகத் தீர;வுகளை ஏற்படுத்தியிருக்கிறார;கள். ஆனால் இங்கு பிற்படுத்தப் பட்டவர;களுக்குள்ளும்கூட ஆணவக்கொலைகள் நடப்பது இன்றைய இளைய சமூகத்தை வேறு எங்கோ இழுத்துச் செல்ல முற்படுகிறது.
உடுமலை கவுசல்யா, சங்கர; பிரச்சினையில் கடைத்தெருவில் வைத்து வெட்டிக் கொலை செய்யப் பட்டதால்தான் கொலையாளிகளுக்குத் தண்டனை கிடைத்தது. ஆனால் சாவித்திரியின் கொலைச் சம்பவத்தில் இறப்புச் சம்பவத்தை மறைத்த குற்றம் மட்டுமே பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இது ஒரு தவறான முன்னுதாரணமாகி குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளவும் இது போன்ற சம்பவங்களில் குற்றச் செயல்கள் அதிகரிக்கவுமே பயன்படும். எனவே சாவித்திரியின் கொலைச் சம்பவத்தை அதைத் தீர விசாரிக்காமல் இருப்பதும் காவல்துறை மீது சந்தேகம் கொள்ள வைக்கிறது. சாவித்திரியின் சாவுக்குக் காரணமானவர;கள் மீது காவல்துறையும் நீதித்துறையும் சரியான நடவடிக்கை எடுத்தால்தான் உண்மையான நீதியும் கிடைக்கும். குற்றங்களும் குறையும். எனவே சரியான நடவடிக்கை எடுக்கும்வரை எங்கள் இயக்கம் தொடர;ந்து பாதித்தவர;களுக்கு ஆதரவாக நின்று போராடும் என்றார;.
இதற்கிடையில் இந்தச் சம்பவம் மட்டுமல்ல, இதுபோல சாவித்திரியின் உறவினர;கள் இனத்திலும் வேறு சாதியைச் சேர;ந்தவர;கள் காதலிக்கவெல்லாம் நினைக்கக் கூடாது என்றால் நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும் என்று மண்டலம் முழுவதும் ஒரு முடிவு செய்யப் பட்டிருப்பதாகவும் தகவல் உண்டு. இது குறித்து தகவலறிய சாவித்திரியின் பக்கம் யாரும் வெளியில் இல்லாததால் தலைமறைவிலிருந்த உறவினர; ஒருவரைச் சந்தித்தபோது.. சாவித்திரிக்கு ஏற்ற கணவன் அந்தப் பையன் இல்லை என்பதைத்தான் பெற்றோர; நினைத்திருக்கிறார;கள். அதனால் வேறு முடிவு எடுத்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார;கள். மேலும் அந்தப் பொண்ணு ஏற்கனவே இரண்டு முறை தூக்கு மாட்டியிருக்கிறாள். அப்போதெல்லாம் காப்பாற்றியது பெற்றோர;தான். ஒரு முறை தனியார; மருத்துவ மனையிலும் இன்னொரு முறை அரசு மருத்துவ மனைக்கும் கொண்டு சென்று காப்பாற்றப் பட்டிருக்கிறாள். அப்போது மாட்டுக் கயிறு கழுத்தில் பின்னி இழுத்துப் போட்டு விட்டதாக வாக்கு மூலம் கொடுத்திருக்கிறாள். அனைத்துக்கும் ஆதாரம் இருக்கிறது.
இப்போதும் அதே போல் ஒருமுடிவெடுத்து தனது காதல் விவகாரம் தனது வருங்காலக் கணவனுக்குத் தெரிந்து விடுமோ என்ற பயத்திலும் இப்போது காவல்துறையில் பிடித்து விட்டிருக்கிறார;கள் என்ற அவமானத்தாலும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். சாதாரண சாவுக்கே எங்கள் ஊரில் யாருக்கும் புதைக்கும் வழக்கமில்லை. அனைத்தையும் எரித்து விடுவோம். இதென்ன வயது முதிர;ந்த சாவா சவத்தைப் போட்டு வைத்துக் கொண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதற்கு? ஏற்கனவே இரண்டு முறை தற்கொலை முயற்சியில் இருந்தவள் இந்த முறை இறந்து விட்டாள். அதனால் உடனே எரித்திருக்கிறார;கள். அவள் தூக்குப் போட்டு இறந்த செய்தி கேள்விப் பட்டு போஸ்டு; மார;ட்டத்திற்கு அனுப்புங்கள் என்று சொன்னோம். அவர;கள் பயந்து எரித்திருக்கிறார;கள் என்பதைத் தவிர வேறு எதுவும் அவர;கள் செய்யவில்லை என்றார;.
ஆனாலும் ஆணவக்கொலையின் பட்டியலில் புதுக்கோட்டையும் இணைத்து பதைபதைத்துக் கிடக்கிறது.
இந்தக் கொலைக்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளும் அதைக் கையாளும் வழக்கறிஞர;களும், அதையே காரணம் காட்டும் கையாலாகாத காவல்துறையும் இருக்கும்வரை இதுபோன்ற குற்றச்செயல்களும் இருந்து கொண்டேயிருக்கும். அப்பாவிகள் செத்துத் தொலைய வேண்டியதுதான் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கொலைச் சம்பவமும் அதற்கு நீதி மன்றம் விதித்த தண்டனையும் உறுதிப் படுத்துகிறது. அதை இன்னொரு கட்டுரையில் காணலாம்….
பெண்களுக்கு இந்தத் துணிச்சலைத் தந்ததே கருப்புச்சட்டைதானே!
பெண்களுக்கு இந்தத் துணிச்சலைத் தந்ததே கருப்புச்சட்டைதானே!
தந்தை பெரியாரின் கொள்கைகளை அறிந்து உணர;ந்து ஏற்றுக் கொண்டவர;கள் எங்கிருந்தாலும் அதைவிட்டு மீறவோ மாறவோ முடியாது என்பதற்கு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நடந்த இந்த ஒரு சம்பவம் நினைவு படுத்துகிறது.
கறம்பக்குடியைச் சேர;ந்தவர; பு+பதி. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர;. அண்மையில் மறைவுற்றார;. பகுத்தறிவுவாதியாக இருந்த அவரது மகன் கார;த்திகேயனும் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று கருப்புச்சட்டை கார;த்திகேயன் என்ற அடைமொழியோடு இருந்து வருகிறார;. (அவர; தந்தை பெரியார; திராவிடர; கழகப் பொறுப்பாளர;) பு+பதி இறந்து விட்டதுடன் கூடிய உறவினர;கள் அவரை எரியு+ட்ட ஏற்பாடு செய்தபோது அவரது ஒரே மகனான கார;த்திகேயன்தான் கொள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர;.
அதை மறுத்த கார;த்திகேயன் என் தந்தை கடைசிவரை பகுத்தறிவுவாதியாக வாழ்ந்து வந்தார;. நானும் பெரியாரின் தொண்டன். நான்தான் கொள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டாம், யாராவது எரித்து விட்டுப் போங்கள் என்று கூறிவிட்டார;. நாங்கள் கொள்ளி வைக்கிறோம் என்று முன் வந்த பு+பதியின் மகள்களையும் (1.தெய்வகலை, 2. திராவிடமொழி 3.சத்தியவாணி) கொள்ளி வைக்க உறவினர;கள் ஒத்துக் கொள்ளவில்லை. காரணம் என்னவென்றால் இந்தச் சம்பவத்தில் முன்னுதாரணமாக பெண்களை அனுமதித்தால் அவர;களின் உறவினர;கள், இனத்தவர; என அனைத்து பெண்களும் அந்த உரிமையை எடுத்துக் கொண்டு விட்டால் தங்களது ஆணாதிக்கத்திற்கு பங்கம் வந்து விடும் என்று கருதி பெரும் தர;க்கம் செய்தனர;.
அப்போது அங்கு வந்த பு+பதியின் மனைவி தேன்மொழி என் மகள்களை அனுமதிக்காவிட்டால் பரவாயில்லை. என் கணவருக்கு நானே கொள்ளி வைக்கிறேன் என்று அவரே கொள்ளி வைத்தார;. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் ஒரு வழியாக உறவினர;கள் சம்மதித்தனர;. பெண்கள் சுடுகாட்டுக்கு வரக்கூடாது என்ற சடங்கை உடைத்த அந்தப் பெண் பாராட்டுக்கு உரியவரானார;. எங்கிருந்தாலும் கருப்புச்சட்டை கருப்புச்சட்டைதானே!
Subscribe to:
Posts (Atom)