கள்ளிக்காட்டு இதிகாசம் என்பது கவிஞர; வைரமுத்து இயற்றிய ஒரு படைப்பாகும். ஆனாலும் இது அவரது படைப்பு அல்ல. புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளிக்காட்டிலிருந்து கண்டெடுக்கப் பட்டதாகும்.
வித்யா-செந்தில், நவீன்-முத்து, மணி- ரிஷா, சங்கர;-கனிஷ்கா, சரண்-பிரியா, வசந்த்-நதி, தேவி-பாண்டியன், சுரேஷ்-சுந்து (சுந்தரியாக இருக்கலாம் சுருக்கமாக சுந்து), சரளா-செந்தில், பிரின்ஸ்-ரேவதி, பாண்டியன்-உதயா, வெங்கட்-கனி, ராஜா-பானு, பாலா-சத்யா, நிவேதா-பத்து, அபி-வினோத், சோலை-அஞ்சலை, குணா-சங்கீதா, சர;மிளா-அப்துல்லா, சங்கர;-கஸ்தூரி, மேரி-விஜய். இவர;கள் எல்லோரும் யார; என்று கேட்கிறீர;களா? இவர;கள் இந்தியாவின் மறு சுதந்திரத்திற்காகப் போராடப் போகிறவர;களா? தமிழகமே இருண்டு கிடக்கிறது. இந்தியா இளைஞர;களின் கையில்தான் என்று அறிஞர; பெருமக்களும் அரசியல்வாதிகளும் முற்போக்கு சிநதனையாளர;களும் அறிவித்து விட்டார;கள். அதனால் இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்று களத்தில் குதித்து போராடிக் கொண்டிருப்பவர;களா? ஓன்றுமில்லை. இவர;கள்தான் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள கள்ளிமரங்களில் இதிகாசங்கள் எழுதியவர;கள். இவர;கள் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர;ப்பங்களில் சித்தன்னவாசலுக்கு வந்தவர;கள். ஆனாலும் கவிஞர; வைரமுத்துவைப்போல கவிதை எழுதாவிட்டாலும் காவியம் எழுதாவிட்டாலும் கள்ளி மரங்களில் தங்களது காதலைப் பொறித்து வைத்து விட்டவர;கள்.
இவர;களது காதல் நிறைவேறியதா? இவர;கள் கடந்த காலங்களில் காதலித்தது இப்போது கல்யாணத்தில் முடிந்திருக்கிறதா? காதலித்த காலங்களில் காதில் கூறிக் கொண்ட தமது காதல் நிறைவேறியிருக்கிறதா என்பது எல்லாம் நமக்குத் தெரியாது. இதிகாசங்கள் எழுதியவர;களுக்குத்தான் தெரியும். குறிப்பாக வித்யா செந்தில் ஆகியோரின் காதல் முற்றிலும் வித்தியாசமானது ஆகும். அவர;கள் காதலித்த அல்லது இதிகாசம் எழுதிய நாளை 11.2.2008- என்று கள்ளிமரத்தில் பொறித்து வைத்த அதேபோல் காதல் முறிந்த தேதியையும் 27.12.2008 என்றும் குறிப்பிடத் தவறவில்லை. மிகச் சரியாகக் குறிப்பிட்டு இருக்கிறார;கள். சித்தன்னவாசல் சமணர; படுக்கைக்குச் செல்லும் வழியில் உள்ள எல்லா கள்ளி மரங்களிலும் (அல்ல செடிகளிலும்) பெயர;களை எழுதிப் போட்டிருப்பவர;கள் ஜோடிகள் மட்டுமல்லாது தங்களது பெயர;களை மட்டும் எழுதிப் போட்டிருப்பவர;களும் ஜோடிகளை (இன்சியல்களை)முன்னெழுத்துகளை மட்டும் பொறித்து வைத்திருப்பவர;களும் இருக்கிறார;கள். முன்பு சமணர; படுக்கை உட்பட கற்பாறைகளில் தங்கள் பெயர;களைப் பொறித்து வைத்தவர;கள் புதுகைத்தந்தியின் வேண்டுகோளை ஏற்று சமணர; படுக்கைகளுக்கு தொல்லியல்துறை கதவு போட்டு பு+ட்டியவுடன் அங்கு எழுதிப்போட முடியாமல் கள்ளிச் செடிகளைத் தேர;ந்தெடுத்து பொறித்து வைத்திருக்கிறார;கள். கள்ளிச் செடிகளை காதலர;கள் பெயர;தாங்கும் பெயர;ப் பலகையாக மாற்றியமைக்காக வாழ்க காதலர;கள்!...
No comments:
Post a Comment