புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் ஆங்காங்கே அம்மைநோய் வந்திருக்கிறது. வெய்யில்காலம் தொடங்கியிருப்பதால் ஆங்காங்கே ஒரு சிலருக்கு வந்திருந்தாலும் பரவத் தொடங்கியிருக்கிறது.
இத குறித்து கொத்தமங்கலம் மணிவேல் சேர;வை மூலிகைப்பண்ணை மேலாளர; இயற்கை மருத்துவர; சுமதி கூறுகையில் வெய்யில்காலம் வந்து விட்டால் அம்மைநோய் வருவது சகஜம்தான். அம்மைநோய் முன்காலத்தில் கடுமையாகவும் குணப்படுத்த இயலாததாகவும் இருந்தது. தமிழக அரசும் சுகாதாரத்துறையும் காலத்தே எடுத்த முடிவுகளால் அம்மைத்தடுப்பு ஊசி போட்டு விடுவதால் அம்மைநோய் இல்லாமல் இருப்பதாக கணக்கில் இருக்கிறது.
ஆனாலும் ஆங்காங்கே வந்து கொண்டிருக்கின்றன. அம்மை நோயில் பெரிய அம்மை சிறிய அம்மை, மணல்வாரி என்று சொல்லக்கூடிய அம்மைகள் வரும். சிறுவர;களுக்கு மணல்வாரியும் மற்றவை பெரியவர;களுக்கும் வரும். விதிவிலக்காக சிறுவர;களுக்கும் அம்மைக்கொப்புளங்கள் வந்து விடும். அதற்கு பழங்காலத்தில் இருந்ததுபோல் கவலைப்பட வேண்டியதில்லை.
வலி அதிகமாக இருந்தால் ஊசிபோட்டுக் கொள்வதில் தப்பில்லை. ஆனாலும் வெய்யில் படாமல் இருந்து கொள்ளுதல் நலம். வௌ;ளைத்துணி விரித்து அதில் வேப்பிலைபோட்டு வைத்து அதில் படுக்க வைக்க வேண்டும். குடிப்பதற்கு இளநீர; கொடுக்கலாம். மாலையில் மோரில் வெங்காயம் வெட்டிப்போட்டு வைத்திருந்து காலையில் குடிக்கக் கொடுக்கலாம். பழ வகைகளும் மிருதுவான உணவு மட்டுமே உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.
அம்மைநோய் கண்டிருப்பவர;கள் படுக்க வைக்கப் பட்டிருக்கும் அறையில் சிறிய வெங்காயத்தை இரண்டு பாதியாக வெட்டி ஜன்னல், கதவு சுவரோரம் என பத்திருபது வைத்துவிட வேண்டும். காலையில் வைக்கும் வெங்காயத்தை மாலையில் அகற்றி விட்டு புதிதாக வெட்டிவைக்க வேண்டும். காலையில் வைப்பதை மாலையில் அகற்றிவிட வேண்டும். அவ்வாறு வைப்பதால் அம்மைநோய் கண்டிருப்பவர;கள் உடலில் இருந்து வெளியாகும் வைரஸ்களை வெங்காயம் இழுத்து வைத்துக் கொள்ளும்.
அவ்வாறு வெங்காயம் வைப்பதால் அம்மைநோய் கண்டிருப்பவர;களுக்கு நோயின் தன்மை பாதியாகக் குறைந்து விடும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அம்மை வந்து விட்டால் மற்றவர;களுக்கு வருவதும் சகஜம் என்கிற நிலை மாறி ஒருவரோடு போய் விடும். மற்றவர;கள் யாருக்கும் வராது. அதே போல் அம்மைநோய் கண்டவர;கள் வீட்டுக்கு யாரும் போனால் அவர;களுக்குத் தொற்றி விடும் என்று கருதி யாரும் போக மாட்டார;கள். அதற்காக வீட்டு முகப்பில் வேப்பிலைக் கொத்து செருகி வைத்திருப்பார;கள். அவ்வாறு செருகி இருந்தால் அந்த வீட்டில் அம்மை நோய் கண்டவர;கள் இருக்கிறார;கள் என்று பொருள். வெங்காயம் வெட்டி வைத்து விட்டால் இவ்வாறான எந்தக் கருத்துக்கும் இடமில்லை. வெங்காயத்துக்கு பெரிய அம்மை, சிறிய அம்மை, மணல்வாரி அம்மை உட்பட அனைத்து அம்மையும் ஓடிவிடும்.