Wednesday, June 17, 2020

புதுக்கோட்டையிலும் ஆணவக்கொலையா?

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தை அடுத்துள்ள இடையன்வயல் கிராமத்தைச் சேர;ந்த நாகேஸ்வரன் மகள் சாவித்திரி. மூன்றாம் ஆண்டு அறிவியல் பட்டதாரி. அதே பகுதியில் தோப்புக்கொல்லையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விவேக். இருவருக்கும் 20-வயது என்ற போதிலும் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர;ந்தவர;கள். கடந்த ஏழாண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகச் சொல்லும் விவேக் பெயிண்டர; தொழில் செய்து வருகிறார;. இருவரின் காதல் குறித்து சாவித்திரியின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தவுடன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார;கள். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி சாவித்திரியை ஆணவக்கொலை செய்து விட்டதாகக் கிடைத்த தகவலின்பேரில் தனது உயிருக்கும் பாதுகாப்பில்ல்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர;, காவல் கண்காணிப்பாளர; அலுவலகம் என்று சுற்றிச்சுற்றி புகார;களைக் கொடுத்து விட்டு ஊர; ஊராகச் சென்று தலைமறைவாக இருக்கும் விவேக்கைச் சந்தித்தோம். அவருடன் அவரது தாயும் இருந்தார;. உயிர;ப் பயத்துடன் இருக்கும் அவரைச் சமாதானப் படுத்தி தைரியம் கொடுத்து பேச வைத்தபோது அவர; நானும் சாவித்திரியும் உயிருக்குயிராகக் காதலித்து வந்தோம். திருவரங்குளம் பள்ளியில் ஒன்றாகப் படித்ததால் எங்களுக்குள் சாதி குறித்த எண்ணம் வரவில்லை. ஒருவரை ஒருவர; விரும்பினோம். ஏனக்கு மூன்று அக்காள்கள். இருவருக்கு திருமணம் ஆகி விட்டது. எனக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் கற்று வைத்திருந்த பெயிண்டர; தொழில் கைகொடுத்ததால் பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டு விட்டேன். சாவித்திரி கல்லூரிக்குச் சென்று வந்தாள். இவ்வளவு காலமாகத் தெரியாமல் இருந்த காதல் ஒரு வருடத்திற்கு முன்பு அவளது வீட்டுக்குத் தெரிய வந்தது. அதனால் நான் வேறு சாதி என்று கருதி அவளது உறவுக்காரர; ஒருவருக்கு நிச்சயம் செய்திருக்கிறார;கள். அதானால் அந்தப் பையனின் போன் நம்பரை வாங்கிய சாவித்திரி நாங்கள் காதலித்த விசயத்தைச் சொல்லியிருக்கிறாள். அந்தப் பையன் சாவித்திரியின் வீட்டில் சொல்லி விட்டான். அப்பொழுதே முடிவு செய்து அவளை அடித்து தூக்கில் போட்டு இருக்கிறார;கள். இரண்டு முறை அதுபோல் நடந்திருக்கிறது. இரண்டிலும் உயிர; தப்பியிருக்கிறாள். இந்த முறை எப்படியும் யாருக்கும் தெரியாமல் கொலை செய்யப் போகிறார;கள். அடித்த அடியில் உயிர; தப்பி வந்திருக்கிறேன். என்னை வந்து கூட்டிக் கொண்டு போ என்று தொலைபேசியில் சொன்னாள். இது நடந்தது 7.6.2020-அன்று இரவு. நாங்கள் வழக்கமாய்ச் சந்திக்கும் அழகம்பாள்புரம் தைலமரக் காட்டுக்குச் சென்ற போது அங்கு பெற்றோர; அடித்த காயத்துடன் நின்றிருந்தாள். நான் அழைத்துக் கொண்டு புதுகை அரசு மருத்துவக் கல்லூரியில் கொண்டு போய் சிகிச்சை செய்து கொண்டு ஒருநாள் முழுவதும் அங்கு இருந்து விட்டு அடுத்த நாள் இருவரும் கோவை சென்று விடலாம் என்று கருதி திருச்சிக்குச் சென்றோம். இடையில் பஸ் இல்லாவிட்டால் மாட்டிக் கொள்வோம் என்று கருதி என்னுடைய நண்பர;கள் சிலருக்கு போன் செய்தவுடன் அவர;கள் காருடன் அங்கு வந்தார;கள். காரில் கோவைக்குச் சென்று கொண்டிருந்தபோது குளித்தலையில் வாகன சோதனை போலீசாரிடம் சிக்கிக் கொண்டோம். அவர;கள் எங்கள் இருவரின் குடும்பங்களுக்கும் தகவல் சொன்னதன் பேரில் சாவித்திரியின் வீட்டிலிருந்து ஆறுமுகம், சிதம்பரம் மற்றும் பெண்ணின் தாயார் சாந்தி, கவுன்சிலர் ராஜேந்திரன், எனது பெற்றோரும் வந்தார;கள். இருவருடைய வயதையும் விசாரித்துப் பார;த்த போலீசார; எனக்கு 21-வயது நிறைவடைய இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறது என்று சொல்லி அதன் பிறகு சாவித்திரியை எனக்குத் திருமணம் செய்து தருவதாகச் சொல்லி இருவரையும் பிரித்தனர;. அப்போது கூட சாவித்திரி தன் உடலில் உள்ள காயங்களைக் காண்பித்து என்னை பெற்றோரிடம் அனுப்பாதீர;கள். அவர;கள் என்னை போட்டுத்தள்ளி விடுவார;கள். ஏற்கனவே இரண்டு முறை அவர;களிடம் தப்பித்துதான் காதலனுடன் சென்றேன். இனியும் விட்டு வைக்க மாட்டார;கள் என்று கதறினாள். போலீசார;தான் எங்களைச் சமாதானப் படுத்தி பிரித்து அனுப்பினார;கள். இப்போது என்னிடமிருந்து நிரந்தரமாகப் பிரிந்து போய் விட்டாள் என்றார;. இச்சம்பவம் குறித்து இந்திய ஜனநாயக மாதர; சங்க மாவட்டச் செயலாளர; சலோமி கூறுகையில் அப்போதே விவேக் எங்களை அணுகி இருந்தால் உரிய நடவடிக்கை எடுத்து இருவரையும் சேர;த்து வைத்திருப்போம். அதற்குப் பிறகும் 11-6-2020 அன்று காலை 9-மணிக்குமேல் பட்டப் பகலில் இந்தப் பையனை அவன் வீட்டுக்கே வந்து காரில் கடத்திச் சென்று அடித்து துவைத்துப் போட்டு விட்டுச் சென்று விட்டார;கள். அப்போதும் யாரிடமும் சொல்ல வில்லை. அன்றிரவே சாவித்திரியைக் கொலை செய்து எரித்திருக்கிறார;கள். அடுத்தநாள் இந்தத் தகவல் ரகசியமாகக் கசியத் தொடங்கியபிறகுதான் விவேக் எங்களிடம் வந்து சொன்னபோது புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆணவக்கொலையா என்று அதிர;ந்து போனோம். என்ன நடந்தது என்று நாங்கள் சிபிஎம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருந்தபோதே விவேக்கைக் கடத்திச் செல்ல சாவித்திரியின் உறவினர;கள் கார;களில் வந்து அலுவலகத்தைச் சூழந்து கொண்டனர;. இந்தத் தகவல் எங்கள் வாலிபர; சங்கத் தோழர;களுக்குத் தெரிய வந்தவுடன் உடனடியாக போலீசுக்குத் தகவல் கொடுத்து பெரிய அசம்பாவிதம் நடப்பதிலிருந்து காப்பாற்றினோம். அதன் பிறகு எஸ்பி, கலெக்டர; என்று புகார; கொடுத்திருக்கிறோம். இப்போது விஏஓ இளையராசா என்பவர; மூலம் சாவித்திரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனை யாருக்கும் தெரியாமல் எரித்ததற்கும் புகார; கொடுக்கச் செய்து சாவித்திரியின் தாய் சாந்தி, பெரியம்மா விஜயா, அவளது உறவினர;கள் ஐந்து பேர; என எழுபேர; மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை அவர;களை உள்ளே தள்ளியிருக்கிறது. கடத்திச் சென்று தாக்கிய புகாரில் நால்வருக்குப் பதில் இருவர; மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. உறவினர;கள் பலர; உள்ளே சென்றிருக்கும்போதுகூட சாவித்திரியின் இனத்தைச் சேர;ந்த மற்றவர;கள் இதை பெரிய கவுரப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு விவேக்கைக் கொலை செய்து விடத் துடித்துக் கொண்டிருக்கிறார;கள் என்றார;. வாலிபர; சங்கத்தின் மாவட்டச் செயலாளர; ஸ்ரீதர; கூறுகையில் ஒரு காலக்கட்டத்தில் பிராமனர;, பிராமனரல்லாதோர; என்ற வகையில்தான் சாதிப் பிரச்சனை இருந்தது. அது மாறிவரும் சூழலில் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கும் மற்றவர;களுக்கும் யார; ஆதிக்க சக்தி என்ற வகையில்தான் தமிழகம் முழுவதுமே சாதீயப் பாகுபாடுகளும் அரசியல் பிரச்சினைகளும் காதல் திருமணப் பிரச்சினைகளும் பார;க்கப் பட்டன. அப்போதெல்லாம் ஆதிக்கத்தை உடைப்பதற்கு பிற்படுத்தப் பட்டவர;கள், மிகவும் பிற்படுத்தப் பட்டவர;கள், தாழ்த்தப் பட்டவர;கள் என அனைவரும் ஒரு முகமாக நின்றுதான் சுமூகத் தீர;வுகளை ஏற்படுத்தியிருக்கிறார;கள். ஆனால் இங்கு பிற்படுத்தப் பட்டவர;களுக்குள்ளும்கூட ஆணவக்கொலைகள் நடப்பது இன்றைய இளைய சமூகத்தை வேறு எங்கோ இழுத்துச் செல்ல முற்படுகிறது. உடுமலை கவுசல்யா, சங்கர; பிரச்சினையில் கடைத்தெருவில் வைத்து வெட்டிக் கொலை செய்யப் பட்டதால்தான் கொலையாளிகளுக்குத் தண்டனை கிடைத்தது. ஆனால் சாவித்திரியின் கொலைச் சம்பவத்தில் இறப்புச் சம்பவத்தை மறைத்த குற்றம் மட்டுமே பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இது ஒரு தவறான முன்னுதாரணமாகி குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளவும் இது போன்ற சம்பவங்களில் குற்றச் செயல்கள் அதிகரிக்கவுமே பயன்படும். எனவே சாவித்திரியின் கொலைச் சம்பவத்தை அதைத் தீர விசாரிக்காமல் இருப்பதும் காவல்துறை மீது சந்தேகம் கொள்ள வைக்கிறது. சாவித்திரியின் சாவுக்குக் காரணமானவர;கள் மீது காவல்துறையும் நீதித்துறையும் சரியான நடவடிக்கை எடுத்தால்தான் உண்மையான நீதியும் கிடைக்கும். குற்றங்களும் குறையும். எனவே சரியான நடவடிக்கை எடுக்கும்வரை எங்கள் இயக்கம் தொடர;ந்து பாதித்தவர;களுக்கு ஆதரவாக நின்று போராடும் என்றார;. இதற்கிடையில் இந்தச் சம்பவம் மட்டுமல்ல, இதுபோல சாவித்திரியின் உறவினர;கள் இனத்திலும் வேறு சாதியைச் சேர;ந்தவர;கள் காதலிக்கவெல்லாம் நினைக்கக் கூடாது என்றால் நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும் என்று மண்டலம் முழுவதும் ஒரு முடிவு செய்யப் பட்டிருப்பதாகவும் தகவல் உண்டு. இது குறித்து தகவலறிய சாவித்திரியின் பக்கம் யாரும் வெளியில் இல்லாததால் தலைமறைவிலிருந்த உறவினர; ஒருவரைச் சந்தித்தபோது.. சாவித்திரிக்கு ஏற்ற கணவன் அந்தப் பையன் இல்லை என்பதைத்தான் பெற்றோர; நினைத்திருக்கிறார;கள். அதனால் வேறு முடிவு எடுத்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார;கள். மேலும் அந்தப் பொண்ணு ஏற்கனவே இரண்டு முறை தூக்கு மாட்டியிருக்கிறாள். அப்போதெல்லாம் காப்பாற்றியது பெற்றோர;தான். ஒரு முறை தனியார; மருத்துவ மனையிலும் இன்னொரு முறை அரசு மருத்துவ மனைக்கும் கொண்டு சென்று காப்பாற்றப் பட்டிருக்கிறாள். அப்போது மாட்டுக் கயிறு கழுத்தில் பின்னி இழுத்துப் போட்டு விட்டதாக வாக்கு மூலம் கொடுத்திருக்கிறாள். அனைத்துக்கும் ஆதாரம் இருக்கிறது. இப்போதும் அதே போல் ஒருமுடிவெடுத்து தனது காதல் விவகாரம் தனது வருங்காலக் கணவனுக்குத் தெரிந்து விடுமோ என்ற பயத்திலும் இப்போது காவல்துறையில் பிடித்து விட்டிருக்கிறார;கள் என்ற அவமானத்தாலும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். சாதாரண சாவுக்கே எங்கள் ஊரில் யாருக்கும் புதைக்கும் வழக்கமில்லை. அனைத்தையும் எரித்து விடுவோம். இதென்ன வயது முதிர;ந்த சாவா சவத்தைப் போட்டு வைத்துக் கொண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதற்கு? ஏற்கனவே இரண்டு முறை தற்கொலை முயற்சியில் இருந்தவள் இந்த முறை இறந்து விட்டாள். அதனால் உடனே எரித்திருக்கிறார;கள். அவள் தூக்குப் போட்டு இறந்த செய்தி கேள்விப் பட்டு போஸ்டு; மார;ட்டத்திற்கு அனுப்புங்கள் என்று சொன்னோம். அவர;கள் பயந்து எரித்திருக்கிறார;கள் என்பதைத் தவிர வேறு எதுவும் அவர;கள் செய்யவில்லை என்றார;. ஆனாலும் ஆணவக்கொலையின் பட்டியலில் புதுக்கோட்டையும் இணைத்து பதைபதைத்துக் கிடக்கிறது. இந்தக் கொலைக்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளும் அதைக் கையாளும் வழக்கறிஞர;களும், அதையே காரணம் காட்டும் கையாலாகாத காவல்துறையும் இருக்கும்வரை இதுபோன்ற குற்றச்செயல்களும் இருந்து கொண்டேயிருக்கும். அப்பாவிகள் செத்துத் தொலைய வேண்டியதுதான் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கொலைச் சம்பவமும் அதற்கு நீதி மன்றம் விதித்த தண்டனையும் உறுதிப் படுத்துகிறது. அதை இன்னொரு கட்டுரையில் காணலாம்….

பெண்களுக்கு இந்தத் துணிச்சலைத் தந்ததே கருப்புச்சட்டைதானே!

பெண்களுக்கு இந்தத் துணிச்சலைத் தந்ததே கருப்புச்சட்டைதானே! தந்தை பெரியாரின் கொள்கைகளை அறிந்து உணர;ந்து ஏற்றுக் கொண்டவர;கள் எங்கிருந்தாலும் அதைவிட்டு மீறவோ மாறவோ முடியாது என்பதற்கு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நடந்த இந்த ஒரு சம்பவம் நினைவு படுத்துகிறது. கறம்பக்குடியைச் சேர;ந்தவர; பு+பதி. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர;. அண்மையில் மறைவுற்றார;. பகுத்தறிவுவாதியாக இருந்த அவரது மகன் கார;த்திகேயனும் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று கருப்புச்சட்டை கார;த்திகேயன் என்ற அடைமொழியோடு இருந்து வருகிறார;. (அவர; தந்தை பெரியார; திராவிடர; கழகப் பொறுப்பாளர;) பு+பதி இறந்து விட்டதுடன் கூடிய உறவினர;கள் அவரை எரியு+ட்ட ஏற்பாடு செய்தபோது அவரது ஒரே மகனான கார;த்திகேயன்தான் கொள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர;. அதை மறுத்த கார;த்திகேயன் என் தந்தை கடைசிவரை பகுத்தறிவுவாதியாக வாழ்ந்து வந்தார;. நானும் பெரியாரின் தொண்டன். நான்தான் கொள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டாம், யாராவது எரித்து விட்டுப் போங்கள் என்று கூறிவிட்டார;. நாங்கள் கொள்ளி வைக்கிறோம் என்று முன் வந்த பு+பதியின் மகள்களையும் (1.தெய்வகலை, 2. திராவிடமொழி 3.சத்தியவாணி) கொள்ளி வைக்க உறவினர;கள் ஒத்துக் கொள்ளவில்லை. காரணம் என்னவென்றால் இந்தச் சம்பவத்தில் முன்னுதாரணமாக பெண்களை அனுமதித்தால் அவர;களின் உறவினர;கள், இனத்தவர; என அனைத்து பெண்களும் அந்த உரிமையை எடுத்துக் கொண்டு விட்டால் தங்களது ஆணாதிக்கத்திற்கு பங்கம் வந்து விடும் என்று கருதி பெரும் தர;க்கம் செய்தனர;. அப்போது அங்கு வந்த பு+பதியின் மனைவி தேன்மொழி என் மகள்களை அனுமதிக்காவிட்டால் பரவாயில்லை. என் கணவருக்கு நானே கொள்ளி வைக்கிறேன் என்று அவரே கொள்ளி வைத்தார;. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் ஒரு வழியாக உறவினர;கள் சம்மதித்தனர;. பெண்கள் சுடுகாட்டுக்கு வரக்கூடாது என்ற சடங்கை உடைத்த அந்தப் பெண் பாராட்டுக்கு உரியவரானார;. எங்கிருந்தாலும் கருப்புச்சட்டை கருப்புச்சட்டைதானே!

Wednesday, June 19, 2019

சென்னையில் திறக்கப் பட்ட திருநங்கைகளுக்கான மருத்துவப் பிரிவு தமிழகமெங்கும் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் திறக்கப்பட வேண்டும். திருநங்கைகள் கோரிக்கை. ம.மு.கண்ணன். மருத்துவத்துறையில் இதுவரை ஆண்கள், பெண்கள் என்று இருந்தபோதிலும் திருநங்கைகளுக்கென்று தனிப்பிரிவோ சிறப்பு மருத்துவர்களோ இதுவரை இல்லாமலிருந்தது. இதில் திருநங்கைள் என்று சொல்லப்பட்டு வரும் மூன்றாம் பாலினத்தவர் மற்றவர்களைக் காட்டிலும் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்று பலவகையிலும் நிரூபித்து வரும் வேளையில் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்து வருகிறது. அவர்களுக்கு வழங்கப் பட்டு வரும் அங்கீகாரத்தை அவர்கள் முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளவில்லையா? அல்லது உண்மையிலேயே சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையா என்பது வேறு. ஆனால் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் ஏற்பாட்டின்படி 3.6.2019 அன்று சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவ மனையில் மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்திருக்கிறார். அது பற்றி புதுக்கோட்டையில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த பிஎஸ்சி படித்து விட்டு கால்நடைத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வரும் ஷிவானி நம்மிடம் பகிர்ந்து கொண்டபோது… சென்னையில் எங்களுக்கென்று இப்படி ஒரு பிரிவு துவங்கி இருப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தமிழக முதல்வருக்கும் எங்கள் அனைவரின் சார்பிலும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதிலும் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருப்பது என்னைப் போல தமிழகம் முழுவதும் அல்லாடிக் கொண்டிருக்கும் சுமார் 50-ஆயிரம் பேருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அவ்வளவு பேரிலும் மூன்றாம் பாலினத்தவருக்கான நல வாரியத்தில் பதிவு செய்திருப்பவர்கள் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் குறைவானவர்கள்தான். வெளியில் வருவதற்கே கூச்சப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போல பட்டதாரியானவர்கள் மிகவும் குறைவுதான். அனைத்தையும் சகித்துக் கொண்டு சமூகத்தில் பணி செய்து வருவது மிகவும் சவாலான ஒரு விசயமாக இருக்கிறது. மற்றவர்களுக்கெல்லாம் சிகிச்சை செய்வதைப் போல எங்களுக்கும் சிகிச்சைக்கென்று காய்ச்சல் தலைவலி என்று போனால்கூட தாமதம் ஆகத்தான் செய்கிறது. அதைத் தவிர்த்துக் கொள்ளவும் சிறப்பான மருத்துவம் செய்து கொள்வதற்காக தனியார் மருத்துவ மனைக்குத்தான் போக வேண்டியிருக்கிறது. அதற்காகும் செலவைப்பற்றி யோசிக்காமல் சென்றால்தான் மருத்துவ சேவையே கிடைத்து வருகிறது. இதற்கு முன் பாண்டிச்சேரியில் இருக்கும் தனியார் மருத்துவ மனையான காந்தி மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் இலவச சிகிச்சைதான் செய்கிறார்கள். அது கடந்த பத்தாண்டுகளாக வாரம்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் செய்யப் படுகிறது. அந்த மருத்துவக் கல்லூரி தனியார் என்ற போதிலும் சாதாரண நோய்கள் முதல் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைவரை அனைத்துக்கும் இலவசம்தான். மற்ற தனியார் மருத்துவ மனைகளில் அனைத்துக்கும் கட்டணம். இப்போது சென்னையில் திறந்திருப்பதும் வாரத்தில் இரு நாட்கள் மருத்துவம் செய்ய வசதி செய்திருப்பதும் எங்களைப் பொறுத்த மட்டிலும் மகிழ்ச்சிதான். இதற்கு முன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்குச் சென்றுதான் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை கொண்டு வந்திருக்கிறோம். அவ்வாறு 500-பேருக்கும் மேல் செய்திருப்பார்கள். அதே நேரத்தில் அங்கு கிடைக்கும் மருத்துவ சேவையைவிட தனியார் மருத்துவ மனைகளில் காசு வாங்கிக் இப்படியிருக்கும்போது வாரத்தில் வெள்ளிக்கிழமைகள் தோறும் என்பதை மாற்றி விட்டு நிரந்தரமாக ஒரு தலைமைச் செவிலியரை நியமித்து அனைத்து நாட்களும் மருத்துவம் செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் இதுபோல் மையங்கள் திறந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். ஹார்மோன்தெரபி செக்கப் முதல் அனைத்தையும் செய்ய முன்வர வேண்டும். எத்தனையோ தனியார் மருத்து மனைகளில் ஹார்மோன்தெரபி கொண்டு வந்தபோதும் அரசு மருத்துவ மனைகளுக்கு என்று இப்போதுதான் கொண்டு வரப் பட்டுள்ளது. அதே போல் நாளமில்லா சுரப்பி மருத்துவமும் அரசு மருத்துவ மனைகளுக்குக் கொண்டு வரவேண்டும். அரசு மருத்துவ மனைகளுக்கு இதுவரை கொண்டுவரப் படாமல் இருக்கும் நிலையை மாற்ற வேண்டும். இதை நாங்கள் கோரிக்கையாகவே கேட்பதற்குக் காரணமே மூன்றாம் பாலினத்தவர் ஆவதற்கு முன்னதாக பெரும்பாலும் பெண்ணாக இருந்து வந்ததால் அவர்கள் பெண் என்றுதான் பாலினச் சான்று பெற்று வைத்திருப்பார்கள். அதனால் அரசுப் பதிவேடுகள் உள்ளிட்;;;ட அனைத்திலும் பெண் என்றே பதிவாகி இருக்கும். இப்போது மூன்றாம் பாலினத்தவராக சான்றிதழ் பெறுவதற்குக்கூட கூச்சப் பட்டு வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் அதிகம். அவர்களுக்கு உரிய மருத்துவ வசதியோ சிகிச்சைகளோ பெற்றுக் கொள்வதில் உள்ள பல சிக்கல்களையும் களையும் விதமாக இதன் மூலம் சேவையாற்ற முடியும். அனைத்துக்கும் சென்னைக்குச் செல்ல வேண்டும் என்று இருக்கக் கூடாது. இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பும்கூட எந்த ஒரு மாவட்டத் தலைமை மருத்துவ மனைகளிலும் எங்களைப் பொறுத்த மட்டிலும் ஏதும் சட்டப் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காகவே முறையான சிகிச்சைகள் செய்து விடுகிறார்கள். ஆனால் கிராமப் புறங்களில் உள்ள மருத்துவ மனைகளில் அப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. அதில் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் எச்.ஐ.வி, பாலிவினைத் தொற்று நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு 100-சதவீதமும் பயனுள்ளதாக இருக்கிறது. அதற்குக் காரணம் நேரடி மருத்துவமாக இருந்தாலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் செல்பவர்களாக இருந்தாலும் கண்காணிப்புக்கு உள்ளாகி இருக்கும் என்பதால் முறையான சிகிச்சைகள் கிடைத்து வருகிறது. பொதுவாகவே சென்னையில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் இந்த வசதி அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். வாரம் ஒருநாள்தான் என்றாலும் அறுவைச்சிகிச்சை, நாளமில்லாச் சுரப்பி செக்கப், சிகிச்சை, ஆலோசனை அன் வாண்டடு என்று சொல்லப்படும் முகத்தில் முடி முளைப்பதை லேசர் சிகிச்சை மூலம் அகற்றப்படும் சிகிச்சையும் இலவசமாக ஏற்படுத்தப்பட வேண்டும். (இந்த லேசர் சிகிச்சைக்கு ரூபாய் 2,500-முதல் ஐந்தாயிரம்வரை தனியார் மருத்துவ மனைகளில் பெறுகிறார்கள்) இதையெல்லாம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் புதுக்கோட்டைக்காரர் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் சார்பில் கோரிக்கையாகவே வைக்கிறோம். புதுக்கோட்டை மாவட்டத் திருநங்கைகள் யாரும் பாலியல் தொழிலுக்குச் செல்வதில்லை என்பதை உறுதிமொழியாக எங்கள் மாவட்டத் தலைவி அசினா நாயக் எடுத்துக் கொண்டதோடு அதைச் செயல் படுத்தியும் வருகிறோம் என்றார்.
புதுக்கோட்டை அருகே தண்ணீர் குடிக்க வந்த மான் நாய் கடித்து சாவு. புதுக்கோட்டை ஜூன் 20. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்திற்கும் வம்பன் நால் ரோடு பகுதிக்கும் இடையில் தோட்டப் பகுதிக்கு தண்ணீர் குடிக்க வந்த மான் நாய் கடித்து இறந்து விட்டது. மேற்காணும் பகுதியில் திருவரங்குளம் மற்றும் வம்பன் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வம்பன் வேளாண் ஆராய்ச்சி மையம், வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம் மற்றும் வல்லத்திராகோட்டை மகாத்மா காந்தி பழப்பண்ணை ஆகியன அமைந்துள்ளன. இந்தப் பகுதி 1338-ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் பெரும்பாலும் வேளாண் சார்ந்த பகுதியாக இருந்தபோதிலும் இந்தப் பகுதிகளைச் சுற்றிலும் முந்திரிக்காடு, தைலமரக்காடு உள்ளிட்ட வனப்பகுதியும் உள்ளன. இந்த வனப்பகுதியில் மான்கள் நடமாட்டம் இருப்பதை அடிக்கடி மக்கள் பார்த்து வருகிறார்கள். எப்போதாவது வெளியில் வரும். மக்களைக் கண்டால் ஓடிவிடும். இந்நிலையில் நேற்று காலை சுமார் ஒன்பது மணியளவில் வம்பன் பகுதியை ஒட்டியுள்ள தோட்டப் பகுதிக்கு மான் ஒன்று தண்ணீர் குடிக்க வந்த போது நாய்கள் விரட்டிக் கடிபட்டு மான் இறந்து விட்டது. அது குறித்து வனக்காவலர்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி எடுத்து வந்து இறந்து கிடந்த மானை அதில் ஏற்றிச் சென்று விட்டனர். இது குறித்து திருவரங்குளம் திருவள்ளுவர் நற்பணி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில் ஒரு காலத்தில் இந்த வனப்பகுதி அனைத்து மிருகங்களும் வாழ்ந்து வந்த இயற்கை சூழ்ந்த பெரும் காட்டுப் பகுதியாக இருந்தது. அதனால் மான்கள் சர்வ சாதாரணமாக வந்து நடமாடும். காமராஜர் ஆட்சிக்காலத்தில் இந்தப் பண்ணை வேளாண்மையின் வளர்ச்சிக்குப் பாடு பட்டபோதிலும் மான்கள் போன்றவற்றைப் பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வனப்பகுதியின் உள்ளே புலிக்குளம் என்றொரு குளம் உள்ளது. இது உள்ளே இருப்பதால் இந்தக் குளத்தில் நீர் இருக்கும்போது வன விலங்குகள் அதிலிருந்து நீர் அருந்தி உயிர் வாழும். வுறட்சிக் காலத்தில் குடிதண்ணீருக்காக வெளியில் வருவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இது குறித்து திருவள்ளுவர் நற்பணி மன்றத்தின் சார்பில் ஏற்கனவே வனத்துறைக்குக் கோரிக்கைகள் வைத்ததால் கடந்த ஆண்டு டிராக்டரில் ஒரு டேங்க் தண்ணீர் கொண்டு போய் புலிக்குளத்தில் விட்டார்கள். பிற்பாடு மழை வந்தபோது வழக்கம்போல் விலங்குகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைத்து வந்தது. இப்போதும் அதுபோல் வைத்து விட்டால் போதும். இல்லையேல் தண்ணீர் தேடி வரும் மான்களை நாய்கள் மட்டுமல்ல சில மனிதர்களாலும் வேட்டையாடப் பட்டு விடும். அதற்கு வனத்துறை மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. மேற்காணும் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் பத்துக்கும் மேற்பட்ட ராட்சச ஆழ்குழாய்க் கிணறுகள் உள்ளன. அவற்றிலிருந்து புலிக்குளத்தில் தண்ணீர் கொண்டு விட்டாலே போதும். மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்படும் என்றார்.

Sunday, September 27, 2015

eyarkai maruthauvam

bloggersmeet2015@gmail.comஇந்தக் கட்டுரை எனது சொந்தப் படைப்பாகும். வேறு யாருக்கும் அனுப்பவில்லை. வேறு எந்த ஒரு இதழிலோ மின்னிதழிலோ பிரசுரமாகவில்லை. 2015 வலைப்பதிவர; திருவிழாவிற்காக அனுப்பப் பட்ட படைப்பாகும். முடிவு வெளியாகும்வரை வேறெதிலும் வெளிவரமாட்டாது என்பதற்கும் உறுதியளிக்கிறேன். நன்றியுடன் ம.மு.கண்ணன்.

இயற்கையோடு வாழ நினைத்தால் வாழலாம்.

(கண்ணன்கணினி.)


    மருத்துவம் என்னும் ஆறெழுத்து மந்திரம் இன்று பலரையும் உயர;த்தியிருக்கிறது. யாரை என்றால் மருத்துவர;களை. நோயில் விழுந்தவர;களைக் காப்பாற்றியதால் அவர;களது தட்சணையில் மருத்துவம் செய்தவர;கள் உயர;ந்திருக்கிறார;கள். ஆனால் ஒரு முறை நோயில் சிக்கியபிறகும் விழிப்பாக இல்லாதவர;கள் மீண்டும் மீண்டும் நோயில் விழுந்துகொண்டேயிருக்கிறார;கள். அவ்வாறு விழுந்து விட்டவர;களையும் நோய் வராமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர;களுக்காகவும்தான் இந்த சிறு கட்டுரை.
    நமக்கு ஆயுள்பலம் என்ன என்று இதுவரை அறிந்திருக்கவில்லை. அதனால் எப்போது இறப்பு வந்தாலும் இறந்து விடுவோம் என்ற தவறான ஒரு நம்பிக்கையை நமக்குள் விதைத்து வளர;த்து வைத்துக் கொண்டிருக்கிறோம். நம் உடம்பும் உயிரும் நம் கையில் இருக்கிறது என்பதை அறியத் தவறி விடுகிறோம். ஒருவரைப் பார;த்து உங்களால் எவ்வளவு காலம் உயிர; வாழமுடியும் என்று கேட்டால் அது என்ன என் கையிலா இருக்கிறது என்பார;கள். கேட்பவரும் ஒத்துக் கொள்ளும் விதமாக அது இருக்கும்.
    நமது வாழ்நாள் பழங்காலத்தில் அதிகமாக இருந்தது என்றும் இல்லையில்லை பழங்காலத்தில் குறைவாக இருந்தது, இப்போது மருத்துவத் துறையின் அபார வளர;ச்சியால் வாழ்நாள் வருடங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன என்றும் பட்டி மன்றம் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக்கேட்டு அதைப்பற்றிக்கூட யோசிக்க நேரமின்றி இயந்திர மனிதர;களாக நம் சூழ்நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.
    நமது வாழ்நாள் வயது 300-ஆண்டுகள் என்றால் சற்று கிறுகிறுப்பு வரத்தான் செய்யும். அவ்வளவு காலம் வாழ முடியுமா? என்ற சந்தேகம் நமக்கு வரும். வாழ முடியும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதைச் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கும். எந்த ஓர; உயிரினத்துக்கும் அதன் பருவ காலத்தைப்போல 20-மடங்கு அதன் வயது ஆகும்.
    ஒரு முயல் பிறந்தவுடன் மூன்று மாதங்களில் பருவத்திற்கு வந்து விடுகிறது. அதன் வயது ஐந்து ஆண்டுகள். அதாவது 3பெருக்கல் 20 எனில் 60மாதங்கள். அதாவது ஐந்து ஆண்டுகள். ஓர; ஆட்டுக்குட்டி பிறந்து விட்டால் ஆறு மாதங்களில் பருவத்திற்கு வருகிறது. அதன் 20-மடங்காக 10ஆண்டுகள் உயிர; வாழ்கின்றன. பசு கன்று போட்டால் அந்தக்கன்றுக்குட்டி ஓர; ஆண்டில் பருவத்திற்கு வருகிறது. அதன் 20-மடங்காக 20-ஆண்டுகள் உயிர; வாழ்கின்றன. அனைத்து இயந்திரங்களுக்கும் சக்தி கணக்கை அளிக்கும் குதிரைக்குட்டி 2-வயதில் பருவத்திற்கு வருகிறது. அதன் 20-மடங்காக 40-ஆண்டுகள் உயிர; வாழ்கின்றன. இது ஒவ்வோரு உயிரினத்துக்கும் பொருந்தும். அது மனித இனத்துக்கும்தான்.
    அப்படிப் பார;க்கும்போது மனித இனத்துக்கு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சற்றேறக்குறைய 15வயதில் பருவத்திற்கு வருகிறார;கள். சிலர; 12, 13ஆகவோ 17-வயதாகவோகூட இருக்கும். சராசரியாகப் பார;த்தால் 15வயது என்பது சரியாக இருக்கும். அதன் 20மடங்கு என்பது 300-ஆண்டுகள் என்பது இயற்கையின் நியதிப்படி சரியான வயதாகும்.
    இது அறிவியல் பார;வையிலும் வரலாற்றுப் பார;வையிலும் இயற்கையைச் சோதித்ததிலும் கிடைத்த உண்மை. வால்கா முதல் கங்கைவரை என்ற நூலில் பல்வேறு காலகட்டங்களிலும் உள்ள  வாழ்நிலையைப் பதிவு செய்திருப்பார; அதன் ஆசிரியர;. மத நம்பிக்கையும் சில நேரங்களில் அதை வலியுறுத்துகின்றன. ஆனால் அதைக் கடைப்பிடிக்கத் தவறியதால்தான் மனிதனின் ஆயுள்காலம் குறைந்து கொண்டே வந்திருக்கிறது.
    இப்பவும் சர;க்கரை நோய் தந்தைக்கு இருந்தால் பிள்ளைகளுக்கு வந்து விடும் என்று நம்புகிறோம். தந்தைக்கு 60வயதில் வந்தது. பிள்ளைக்கு 50வயதில் வந்தது. பேரனுக்கு 40-வயதிலேயே வந்து விட்டது என்பதை ஒப்புக் கொள்கிறோம். அப்படித்தான் வயது குறைந்து விட்டது. இதே தத்துவத்தை நம் முன்னோர;கள் நம்மிடம் சொல்லும்போது எங்கள் முப்பாட்டனார; 120வயது வரை வாழ்ந்தார;. எங்கள் பாட்டனார; 110வயது வரை வாழ்ந்தார;. என் தந்தையார; 100-வயது வரை வாழ்ந்தார;. எனக்கு 85வயது ஆகிறது. என் தந்தையார; வயதுவரை வாழ்ந்து விடலாம் என்று பார;த்தால் இப்போது மூச்சு முட்டுகிறது. இன்னும் ஓர; ஐந்து வயது வாழ்ந்து வரலாற்றை நிறைவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொல்வதைப் பார;க்க முடிகிறது. அப்படி என்றால் நம் நிலை என்னவாக இருக்கும்? என்னவோ இருக்கும்வரை இருப்போம். போகிற போது போக வேண்டியதுதான் என் மனநிலை சாதாரணமாக வந்து விடுகிறது.
    அதை மாற்ற வேண்டும். அது சற்று கடினமானதுதான். போராட்டமே வாழ்க்கை என்ற நிலையைச் சற்று மாற்றி வாழ்வதற்காக நாம் போராட வேண்டியிருக்கும். காரணம் வாழும் வயதை அதிகரிக்கச் செய்யும் சுயபோராட்டமாகும். அது நமக்கு மட்டுமல்ல. நம் சந்ததியின் வயதையும் அதிகரிக்கச் செய்ய வேண்டிய போராட்டம். நம் தந்தையின் வயதைவிட பத்திருபது வயது கூட்டுவதற்கு நாம் போராடிக் கூட்டினால் நம்வயதை விட நம் பிள்ளைகளின் வயதை இன்னும் ஒரு பத்திருபது வயதை அதிகரிக்கச் செய்ய அவர;களைப் போராடத் தயார; படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் நூறு வயது  வாழ்ந்தால் நம் பிள்ளைகள் நூற்றிருபது வயதுவரை வாழ்வதற்குத் தயாராகுவார;கள். அவர;களது பிள்ளைகள் 140-வயது வரை வாழ்வார;கள். இது நடக்குமா? என்றால் நிச்சயம் நடக்கும். இதுபோலவே பத்திருபது தலைமுறைகள் கடந்தால் நம் தலைமுறையின் வாரிசுகள் நிச்சயமாக 300-ஆண்டுகள் உயிர; வாழ முடியும். அதுவரை நம் சந்ததியினரைப் பழக்கப்படுத்திக் கொண்டு வருவதானது சகலத்தையும் உணர;ந்திருந்தால் முடியும்.
    பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த உயிரினங்களுக்கும் இந்த ஆயுள்காலம் சரியாக இருக்கிறது. இப்போது இருக்கும் உயிரினங்களுக்கும் இந்த கணக்கு சரியாக இருக்கிறது. மனிதனுக்கு மட்டும் மாறிவிட்டது. ஏன் என்றால் உணவுமுறை மாறிவிட்டது. அதனால் வாழ்நாளும் குறைந்து வந்து விட்டது. நம் முப்பாட்டன் திருவள்ளுவர; குறைந்தது 300-ஆண்டுகளாவது உயிர; வாழ்ந்திருந்தால் மட்டுமே 1330-குறட்பாக்களுக்குள் உலக விசயங்கள் அனைத்தையும் அடக்கியிருக்க முடியும். அது உலகப்பொதுமறையாகவும் படைத்திருக்க முடியும். திருவள்ளுவர; வயதிலும் சிறு தவறை நாம் செய்திருக்கிறோம். அவரது பிறப்பை வைத்து இதுவரை திருவள்ளுவர; ஆண்டு சொல்லிக் கொண்டிருக்கிறோமே தவிர எப்போது பிறந்தார; எப்போது மறைந்தார; என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை.
    சரி நம் சந்ததியினர; 300- உயிர; வாழ்வது இருக்கட்டும். நாம் 100வயதுவரையாவது வாழ வேண்டாமா? அதற்கு மேல் வாழ இப்போது தயாரானாலேபோதும். அது இருக்கட்டும். உயிர;மீது ஆசை கொண்டவர;கள் அதற்கு மேலும் வாழட்டும். ஆனால் நூறுவயது சாத்தியம் என்பது கண்ணுக்கு முன்னால் உண்மை என்றபோது அதுவரை நோய்நொடியின்றி வாழ வேண்டாமா? வாழ வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதற்கு சில உணவு முறை மாற்றங்களைச் செய்து கொண்டாலேபோதும்.
    நமக்குச் சில தவறான புரிதல்கள் உண்டு. அதில் உதாரணத்திற்கு ஒரு குறளைக் குறிப்பிட விரும்புகிறேன்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்- என்ற குறட்பாவிற்கு ஏற்கனேவே உண்ட உணவு செறித்தபின் உணவு உண்டால் யாக்கை என்று சொல்லக்கூடிய இந்த உடம்புக்கு மருந்து என்று ஒன்று வேண்டாம் என்ற பொருளாகும் என்று இதுவரை பொருளுரை சொல்லி வரப் பட்டுள்ளது. அதற்கு நாம் மறுக்கவும் இல்லை. ஆனால் அதைச் சற்று மாற்றியும் யோசிக்க வேண்டும்.
    அதாவது மருந்து என யாருக்கு வேண்டாம் என்றால் அருந்தியதை அற்றுப் போகச் செய்வதை போற்றி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார;. அதாவது நூறுகிராம் எடைகொண்ட பாலைச் சாப்பிட்டால் 70-கிராம் எடையுள்ள தண்ணீர;தான் வெளியேறும். 100-கிராம் எடையுள்ள பழச்சாறு உட்கொண்டால் 60-கிராம் எடைகொண்ட கழிவுகள்தான் வெளியேறும். மற்றவை உடலில் தங்கிவிடும். அன்னப்பால் என்று சொல்லக்கூடிய நீராகாரம் 100-கிராம் எடை உட்கொண்டால் 90-கிராம்தான் வெளியேறும். ஆனால் 100-கிராம் எடைகொண்ட தண்ணீரை உட்கொண்டால் அது 110-கிராம் எடைகொண்ட கழிவுகள் அது சிறுநீராகவும் வியர;வையாகவும் வெளியேறும். அதாவது உடலில் உள்ள 10-கிராம் எடைகொண்ட நச்சுப் பொருட்களை நச்சு உப்புக்களை வெளியே கொண்டு வந்து விடுகிறது. அவ்வாறு அற்றதை அற்றுப்போகச் செய்யும் தண்ணீரை உணவாக உட்கொண்டு உயிர;வாழப் பழகிக் கொள்ளும் உடம்பிற்கு மருந்து என்று ஒன்று தனியாக வேண்டியதில்லை என்கிறார; நம் திருவள்ளுவர;. அதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்றால் மற்றவர;களைப் பார;த்து முடிவுக்கு வர முடியாது. தான் பழகிப் பார;த்தால் மட்டுமே முடியும். அதற்குக் குறைந்தது ஒருமாதத்திலிருந்து ஆறுமாதம்வரைகூட ஆகலாம். அதை உடனே ஒரு முடிவுக்கு வர முடியாதவர;கள்கூட ஒரு வருடத்தில் பழகியும் பயிற்சி எடுத்தும் கடும் முயற்சி செய்தும் கண்டு கொள்ளலாம்.
    அதற்குச் செலவில்லை. சிரமம் இல்லை. முயற்சி இருந்தால் மட்டும் அறிந்து கொள்ளலாம். அதைத்தான் அருமையாக ஒன்றே முக்கால் அடியில் சொல்லியிருக்கிறார; நம் பாட்டனார; திருவள்ளுவர; அவர;கள். இதை வலியுறுத்திச் சொல்லும் நான் எனக்கு வந்த பலநோய்களுக்கு வெறும் தண்ணீரை மட்டும் பயன்படுத்தி குணப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சில தேவைகளுக்காகவும் ஆய்வுக்காகவும் எனக்கு நானே வலிய நோயை வரவழைத்து அதற்கு இந்த தண்ணீர; எனும் மருந்தைக் கொண்டு குணப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் பெற்ற பலனை மற்றவர;களுக்கும் பயன் படுத்தி ஏராளமான நபர;களைக் குணப்படுத்தியும் இருக்கிறேன். இந்தப் பயிற்சியானது எந்தப் பணியில் இருப்பவர;களுக்கும் உயிர;மீது அக்கறை கொண்டவர;களுக்கும் சாத்தியப்படும். அதைத்தான் வள்ளுவர; சொல்லியிருப்பதாக வேறு சிலரும் சொன்னதன் பொருளைப் புரிந்து கொண்டு பயன்படுத்திப் பார;த்து நான் எடுத்துக் கொண்டேன்.
    தண்ணீரை உணவாகப் பயன்படுத்துவது முதலில் பயிற்சி எடுத்துக் கொள்ளும்போது சிரமமாகத்தான் இருக்கும். அதற்காக முதலில் உணவின் அளவைக் குறைத்து விட்டுச் சிலகாலம். அதன்பிறகு இயற்கை உணவுகளை உட்கொண்டு சில காலம். பிறகு அளவைக் குறைத்து சிலகாலம் என மற்றவற்றைக் குறைத்து விட்டு தண்ணீரை மட்டும் அதகரித்துக் கொண்டே வர இது சாத்தியமாகும் என்பது எளிமையான உண்மை.
    இவ்வாறு வாழ்பவர;கள் நம்மில் பலரும் இந்த 2015-லும் இருக்கிறார;கள் என்று சொல்லும்போது நமக்குமட்டும் சாத்தியப்படாதா என்ன? கோவை பொறியாளர; வெங்கடேசன், கோபிச்செட்டிபாளையம் முன்னாள் ராணுவ வீரர; இனியன், ஆசிரியர; மற்றும் பொறியாளர; இளங்கோ ஆகிய மூவரைத் தவிர இன்னும் நிறையப் பேர; இருக்கிறார;கள். அவர;களுக்கு இது சாத்தியப்படும்போது மனிதனுக்கு மருத்துவம் என்ற நிலையே இருக்காது. இப்பொழுதும் பாருங்கள் தான்தோன்றித்தனமாக இருக்கும் விலங்கினங்களுக்கு மருத்துவம் தேவைப்படுவதில்லை. அதன் இயற்கை நிலையை மாற்றி அடைத்தும் கட்டிப்போட்டும் வளர;க்கும் விலங்கினங்களுக்கு மட்டுமே நோய் வருகின்றன. குறிப்பாக இயற்கையோடு ஒன்றி இருக்கும் விலங்கினங்களுக்கும் தேவைப்படுவதில்லை. ஆனால் மரபணு மாற்றம் செய்த விலங்கினங்களுக்கு மட்டும் அடையாளம் தெரியாத நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் இயற்கையை மாற்றும்போதுதான் நோய்கள் அதிகரித்து வயது குறைகின்றனவே தவிர இயற்கையைக் கடைப்பிடிக்கும்போது எந்த ஒரு பாதிப்பும் வருவதில்லை.
    விருந்து என்றால் அறுசுவை உணவு என்கிறோம். ஆறுசுவை உட்கொள்ளுகிறோமா? இனிப்பு, உப்பு, துவர;ப்பு, கார;ப்பு, புளிப்பு என்று எடுத்துக் கொள்ளும் நாம் அதற்கு இணையாக கசப்பை விட்டு விடுகிறோமே! அப்புறம் மற்ற சுவைகளால் வரக்கூடிய பாதிப்பைச் சரிசெய்யும் கசப்புக்கு என்று தனியாக மருந்து எடுத்துக் கொள்ளும் நிலை வந்து விடுகிறது. ஆனால் அனைத்தையும் சரி செய்யக் கூடியது தண்ணீரில் மட்டும் உள்ளது. அதையும் தாண்டி பஞ்ச பு+தங்களையும் பயன்படுத்தி வாழக் கற்றுக் கொண்டால் சித்தர;களின் வாழ்வியலாகும். அது நமக்கு வேண்டுமா வேண்டாமா என்பது வேறு. அது விருப்பப்பட்டவர;கள் மட்டும் தேர;ந்தெடுக்கும் வழியாகும்.
    ஆனால் நோயின்றி வாழ சாதாரண உணவுப் பழக்க மாற்றம் மட்டுமே போதுமானது. அதையும் கற்றுக் கொண்டு முழுமையான பயிற்சியை எடுத்துக் கொண்டு பின்னர; விட்டு விடலாம். தேவைப்படும்போது மட்டும் கடைப்பிடித்துக் கொண்டாலே நூறு வயதுவரை நோய் நொடியின்றி வாழ முடியும் என்று சொல்லும்போது அனைவரும் முன்வரலாமே.
    சில ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில கிராமங்களில் மர;மக்காய்ச்சல் என்றொரு நோய் வந்தது. டெங்கு என்று பெயர; சூட்டி அழைக்கப் பட்டது. அதில் சிலர; இறந்து போய் விட்டார;கள். அப்போது பொதுமக்கள் விழித்துக் கொண்டார;கள். அதனால் அரசு மருத்துவ மனைகளின் மீது இருந்த நம்பிக்கையை இழந்து தனியார; மருத்துவ மனைகளுக்குக் கொண்டு செல்லத் துவங்கினார;கள். அங்கு கொண்டு சென்றும் பலர; இறந்தார;கள். மக்கள் பீதியடைந்தார;கள். தனியார; மருத்துவ மனைகளுக்குக் கொண்டு சென்றபோதிலும் சில லட்சங்களைச் செலவு செய்து காப்பாற்றினாலும் சாதாரண காய்ச்சலுக்குக்கூட மக்கள் பயந்தார;கள். நிலத்தை விற்று மட்டுமல்ல தாலியை விற்றுக் கணவரைக் காப்பாற்றிய பெண்கள் உண்டு என்றால் அந்தக் காய்ச்சலின் உக்கிரம் எந்தளவிற்கு மக்களைப் பாதித்திருக்கும் என்று நினைவு படுத்தி அறிந்து கொள்ளலாம்.
    மருத்துவ மனைகள் தோறும் மரண ஓலங்கள். சிறுசிறு மருத்துவ மனைகள் எல்லாம் மிகப் பெரிய மருத்துவ மனைகளுக்கு பரிந்துரை செய்து நோயாளிகளை அனுப்பிக் கொண்டிருந்தன. அங்கும் செத்து விழுந்து கொண்டிருந்தால் என்னதான் செய்வார;கள் பாவம். ஒவ்வொரு நோயாளிகளிடமிருந்தும் லட்சங்களைப் பெற்றுக் கொண்ட மருத்துவமனை நிர;வாகங்களால் உயிர;களைக் காப்பாற்ற முடியாமல் திணறின. மருத்துவ மனைகளின் படுக்கைகளில் மட்டுமல்ல தாழ்வாரங்களில்கூட மர;மக்காய்ச்சல் நோயாளிகளும் அவர;கள்தம் உறவினர;களும்தான்.     ஆனால் அரசு மருத்துவ மனைகளில் காற்று வாங்கியது. அரசுமருத்துவர;கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார;கள். கேட்டால் எங்களிடம் உரிய மருத்துவ உபகரணங்கள் இல்லை. மர;மக் காய்ச்சலுக்கு சோதனை செய்யும் கருவிகள் அங்குதான் இருக்கின்றன என்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார;கள்.
    ஒரு கட்டம்வரை பொறுத்துப் பார;த்த பொது மக்கள் எங்களைக் காப்பாற்று அரசே என வீதிகளில் வந்து போராட்டம் நடத்தத் துவங்கினார;கள். அதுவரை சித்த மருத்துவத்தில் குணமாகிவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்த சித்த மருத்துவர;களின் குரல் எடுபடவில்லை. மக்கள் போராட்டத்திற்குப் பிறகு எடுபட்டது. சித்த மருத்துவர;கள் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து எழுந்த குரல் எடுபட்டது. அரசு ஏற்றுக் கொண்டதோ ஏற்றுக் கொள்ளவில்லையோ தெரியாது. அந்த மருந்தைப் பரிந்துரை செய்து தொலைக் காட்சிகளின் மூலம் எடுத்துச் சென்றது. அதை எடுத்துச் சொல்லவும் திரைப்பட நட்சத்திரங்கள் தேவைப் பட்டார;கள். திரைத்துறையினர; சொன்னவுடன் மர;மக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர;கள் தாங்களே அந்த மருந்தைத் தயாரித்து உட்கொண்டார;கள். காய்ச்சல் பறந்து ஓடிவிட்டது.
    அந்த மருந்துதான் நிலவேம்புக் கசாயம், ஆடாதொடைக் கசாயம், பப்பாளி இலைச்சாறு. இந்த மூன்றில் எதைக் கொடுத்தாலும் குணமானது. மூன்றையும் கொடுத்தாலும் குணமாகி விட்டது. பக்க விளைவுகள் ஏதுமில்லாமல் இருந்தது. இன்றளவும் இந்த மூன்று கசாயத்தைக் கண்டு டெங்கு எட்டிப்பார;க்கவில்லை. இந்த நோய்க்காக மருத்துவ மனைகளில் யாருமில்லை. சில நேரங்களில் வந்த காய்ச்சல் நோயாளிகளைச் சோதித்ததில் யாருக்கும் டெங்கு இல்லை என்றால் டெங்கு யாருக்குச் சொந்தம் என்றும் மேற்சொன்ன, கடைப்பிடித்த, டெங்குவை ஓடஓட விரட்டியடித்த நம் வீட்டில் முளைத்துக் கிடந்த தாவரங்கள் யாருக்குச் சொந்தம் என்றும் எண்ணிப் பார;த்து விட்டு இயற்கை மருத்துவத்தைக் கடைப்பிடிப்பதா வேண்டாமா? அது நமக்கு ஒத்து வருமா வராதா என்று ஒரு முடிவுக்கு வரலாம். இது ஓரு நோய்தான். ஒரு மருந்துதான். இதைப்போல் பல நோய்களுக்கும் பல மருந்துகளும் மருத்துவ முறைகளும் உள்ளன. ஒரே மருந்து பல நோய்களைக் குணப்படுத்த வல்லது. ஒரு நோய்க்கு பல மருந்துகளும் பயன் படும். அவையெல்லாம் மருந்துகளா உணவா என்பதை ஆய்வு செய்து பார;க்கும்போதுதான் இதுவரை எவ்வளவு நாம் இழந்திருக்கிறோம் என்பது புரிய வரும். அதனால் முதலில் இயற்கையைப் பற்றி சிறு வயதிலேயே மிகச் சரியாகப் புரிந்து கொண்டால் முன்னூறும் வாழ முடியும். அதற்கு மேலும் வாழமுடியும். அதற்குத் தயாராகினால் அனைத்தும் நமக்கு சாத்தியமே. உலகமே நம் கையில் (அறிவியல் வளர;ச்சியால்) என்பதுபோல் நம் வாழ்க்கை நம் கைகளுக்குள் வந்து விடும். வாழ நினைத்தால் வாழலாம்.